ஐயப்பன் சும்மா விடமாட்டார்.. கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர்!

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலின் ஆபரணங்களில் இருந்து தங்க திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராம் கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஐயப்பன் சும்மா விடமாட்டார் என்றார்.

சபரி மலை தங்கத் திருட்டு வழக்கின் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த, தங்க திருட்டு வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் பொட்டியுடன் நடிகர் ஜெயராம் எத்தனை முறை பூஜைகளில் கலந்து கொண்டார். இவர்களுக்கு இடையே எந்தவிதமான நிதி பரிவர்த்தனைகள் நடந்தது என்பதைக் குறித்து கடந்த மாதம் சென்னை உள்ள ஜெயராமிம் வீட்டில் SIT அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Jayaram Sabarimala Gold

சபரிமலை தங்க திருட்டு வழக்கு: இந்த வழக்கில் நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து, இன்று நடிகர் ஜெயராம் விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஐயப்பன் அவர்களை சும்மா விடமாட்டார் என்றார். நான் ஒரு சாதாரண மலையாளி, பல ஆண்டுகளாக பல கோவில்களில் நடைபெறும் பூஜைகளுக்கு அழைக்கப்படுவதால் கலந்து கொள்கிறேன். அதுபோல சபரிமலை தொடர்பான ஒரு பூஜைக்காக என்னை அழைத்தனர். உன்னிகிருஷ்ணன் பொட்டி உள்ளிட்டோர் பல முறை இப்படிப் பூஜைகளுக்கு என்னை அழைத்துள்ளனர். அதில், ஏதேனும் தவறு நடந்து இருக்கா என்பதை நீதிமன்றமும், விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன என்றார்.

ஜெயராமிடம் விசாரணை: 2019ஆம் ஆண்டு சபரிமலை கோவிலின் சன்னதி தகடுகள் மற்றும் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத்தை " தங்கம் பூசுவது" என்ற பெயரில் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், சபரிமலை கருவறைக்குச் செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால் செழிப்பு உண்டாகும் என அவர் சொன்னதால்தான் வீட்டில் பூஜை செய்தோம் என ஜெயராம் கூறியிருந்தார். இந்த வழக்கில் ஜெயராமுக்கு நேரடி தொடர்பு இல்லையென விளக்கம் அளித்து இருந்தாலும், தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்குக்கான ஆவணங்களை SIT-யிடமிருந்து பெற கோல்லம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X