Actor Jayaram: இளம் விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்.. கைக்கொடுத்த நடிகர் ஜெயராம்!
கொச்சி: கேரளாவில் தன்னுடைய தந்தையின் இறப்பையடுத்து 13 வயதிலேயே இளம் விவசாயியாக மாறியவேர் மேத்யூ பென். இவர்குறித்து தெரிந்துக் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ஒரு லட்சம் ரூபாய் லோன் வழங்கிய நிலையில் மேத்யூவிற்கு பல உதவிகள் கிடைத்தன. தற்போது 22 மாடுகளை வளர்த்துவந்த மேத்யூவிற்கு கடந்த புத்தாண்டின்போது மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது. 10வது படிக்கும் மேத்யூ படிப்பு, கால்நடை வளர்ப்பு என பல விஷயங்களை செய்துவந்த நிலையில், கடந்த புத்தாண்டின்போது இவரது பண்ணையில் இருந்த எருமை, பசுக்கள் என 13 கால்நடைகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தன.
என்னவென்று யோசிக்கும் முன்பு நடந்து முடிந்த இந்த விஷயத்தை தாங்கும் சக்தியில்லாத சிறுவனான மேத்யூவிற்கு இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டான். மேலும் 9 பசுக்களுக்கு உரிய நேரத்தில் மருந்து கொடுக்கப்பட்டதால் அவை உயிர் பிழைத்தன. இவற்றில் இரண்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மேத்யூவின் இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு கேரள நடிகர்கள் கைக்கொடுத்து வருகின்றனர். மம்முட்டி, பிரித்விராஜ், ஜெயராம் என நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மேத்யூவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இளம் விவசாயி: கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் மேத்யூ பென். தன்னுடைய தந்தையின் திடீர் மரணத்தால் அவர் வளர்த்துவந்த மாடுகளை பராமரிக்க முடியாமல் தன்னுடைய தாய் ஒவ்வொன்றாக விற்கத்துவங்க, தானே முன்வந்து மாடுகளை வளர்க்கத் துவங்கினார். அப்போது அவருக்கு 13 வயது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேரளாவின் பால்வளத்துறை அமைச்சர் லோன் வழங்கி கைக்கொடுத்த நிலையில், தன்னுடைய மாடுகளின் எண்ணிக்கையை 22ஆக கூட்டினார். தற்போது 10ம் வகுப்பு படித்துவரும் மேத்யூவிற்கு இந்த புத்தாண்டு சிறப்பாக அமையவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாடுகளுக்கு மரவள்ளிக்கிழங்கின் தோலை உணவாக கொடுத்ததாக தெரிகிறது.
மாடுகள் உயிரிழப்பு: மரவள்ளிக்கிழங்கின் தோலில் சயனைட் விஷத்தின் அம்சம் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவற்றை சாப்பிட்ட மேத்யூவின் 13 மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன. மேலும் 9 மாடுகளுக்கு உரிய நேரத்தில் மருந்து கொடுக்கப்பட்டதால் அவை காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் இரண்டு மாடுகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான மேத்யூவிற்கு, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பேரிடியான சம்பவம்: தன்னுடைய தந்தையை இளம் வயதிலேயே பறிகொடுத்த மேத்யூ, தன்னுடைய அம்மா, தம்பி மற்றும் தங்கையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அந்த இளம் வயதில் மாடுகளை பராமரித்து, தன்னுடைய பள்ளிக் கல்வியையும் தொடர்ந்து வந்த நிலையில் இந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ஜேசிபிக்கள் மூலம் அந்தப் பகுதியில் மாடுகள் புதைக்கப்பட்ட காட்சி அப்பகுதி மக்களையும் சேர்த்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பால்வளத்துறை அமைச்ச்ர் சிஞ்சுராணி உள்ளிட்ட அமைச்சர்கள் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளனர். உதவிக்கரமும் நீட்டியுள்ளனர்.

கைக்கொடுத்த நடிகர்கள்: நடிகர் மம்முட்டி 1 லட்சம் ரூபாய், நடிகர் பிரித்விராஜ் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் எம்எல்ஏ பிஜே ஜோசப் ஒரு பசு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே மேத்யூவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் ஜெயராம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் இதுபோன்ற சோகம் ஏற்பட்டதாகவும் திடீரென தன்னுடைய பண்ணையில் இருந்த 22 மாடுகள் இறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியாதது மிகப்பெரிய சோகம் என்றும் அவர் கூறினார்.
நேரில் ஆறுதல் கொடுத்த ஜெயராம்: தாங்களே நேரில் சென்று மாடுகளை பார்த்து வாங்கி வந்து, அவற்றிற்கு பெயர் வைத்து நேசித்த மாடுகளை ஜேசிபி மூலம் புதைத்தப்போது தான் உள்ளிட்ட தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் அழுதுக் கொண்டே இருந்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் மேத்யூவிற்கு எல்லாம் மாறும் என்று ஆறுதலை கொடுத்த ஜெயராம், அந்த இடத்தில் 100 மாடுகளை கட்டுவதற்கான வசதியை இறைவன் ஏற்படுத்துவார் என்றும் ஆறுதல் கொடுத்துள்ளார். மேலும் பசுக்களை வாங்கப் போகும்போது தானும் உடன் வருவதாகவும் மேத்யூவிற்கு வாக்குறுதி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











