ஆழ்வார்க்கடியான நம்பி கேரக்டருக்காக மணிரத்னம் வடிவமைத்த வேறு கெட்டப்.. புகைப்படம் வெளியிட்ட ஜெயராம்!

சென்னை :பிரபல மலையாள நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கேரக்டரில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்தியுடன் மல்லுகட்டும் கேரக்டரில் ஜெயராம் வரும் காட்சிகள் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியது.

இதனிடையே இந்தக் கேரக்டர் குறித்து தற்போது புதிய தகவலை ஜெயராம் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி என முன்னணி கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

முக்கிய கேரக்டர்கள்

முக்கிய கேரக்டர்கள்

இதேபோல ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், சுந்தர சோழர் என கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பிரபல நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். படத்தின் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.

சிரத்தையாக வடிவமைத்த கேரக்டர்கள்

சிரத்தையாக வடிவமைத்த கேரக்டர்கள்

மேலும் வரலாற்று புனைவு நாவல் என்பதால் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொருவரின் தோற்றத்தையும் மிகச் சிரத்தையாக வடிவமைத்திருந்தார் மணிரத்னம். இது அவரது நீண்ட நாளைய கனவுப் படமாக இருப்பதால் இதையெல்லாம் அவர் முன்னதாகவே திட்டமிட்டிருந்ததையே இவை பிரதிபலித்து வருகின்றன.

சிறப்பான ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டர்

சிறப்பான ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டர்

சீரியசாக செல்லும் இந்த வரலாற்றுக் கதையில் சற்றே ரிலாக்ஸ் அளிக்கும் விதமாக படத்தில் இடம் பெற்றிருந்த ஜெயராம் நடித்த ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் நகைச்சுவையாக அமைந்திருந்தது. இந்த படத்தில் குடுமி வைத்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்தில் ஜெயராம் நடித்திருந்தார். கார்த்தியுடன் இவர் மல்லுகட்டும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.

வேறு ஒரு கெட்டப்

வேறு ஒரு கெட்டப்

இதனிடையே, ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டருக்காக முன்னதாக வேறு ஒரு கெட்டப்பை மணிரத்னம் உருவாக்கி வைத்திருந்தார் என்கிற விஷயம் தற்போது நடிகர் ஜெயராம் மூலம் வெளியாகி உள்ளது. அப்படி உருவாக்கப்பட்ட ஆழ்வார்க்கடியான் நம்பியின் இன்னொரு தோற்றத்தையும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.

இளமையான கெட்டப்

இளமையான கெட்டப்

படத்தில் இடம்பெற்றுள்ள தோற்றத்தை விட இது இன்னும் இளமையாக இருப்பதாகவும் படத்தில் நடித்த ஹீரோக்களின் கதாபாத்திரங்களுக்கு சரிசமமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆனாலும் குடுமியுடன் படத்தில் தோன்றும் ஜெயராமை பார்க்கும்போதே நகைச்சுவை உணர்வு தோன்றவேண்டும் என்ற கருத்துடன்தான் இந்த கெட்டப்பை மணிரத்னம் மாற்றியிருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X