அடுத்த மாதத்தில் காளிதாஸ் ஜெயராமிற்கு திருமணம்.. குடும்பத்தோட தமிழக முதல்வருக்கு அழைப்பு!
சென்னை: நடிகர் ஜெயராம் மலையாள நடிகராக இருந்த போதிலும் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் தனியாகவும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கமலுடன் பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஜெயராமின் படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றவை.
இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் படங்களில் இவர் கவனம் பெற்று வருகிறார். சமீபத்தில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் லீட்கேரக்டரில் இவரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் 7ம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயராம் உள்ளிட்ட குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் ஜெயராம்: நடிகர் ஜெயராம் மலையாள நடிகராக இருந்த போதிலும் தமிழ். தெலுங்கு படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்/ குறிப்பாக கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த ஜெயராம் தமிழ் ரசிகர்களை தன்னுடைய காமெடி கலந்த நடிப்பால் சிறப்பாக கவர்ந்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழில் மிகவும் பரிட்சயமான நடிகர்தான். ஒரு பக்க கதை படம் மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்த நிலையில் இந்தப் படம் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து விக்ரம், பாவக்கதைகள், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
காளிதாஸ் ஜெயராம் திருமணம்: சமீபத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ராயன் படத்திலும் இவர் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி வரும் காளிதாஸ் ஜெயராமிற்கு வரும் டிசம்பர் 7ம் தேதி கேரளாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடக்கவுள்ளது. மாடல் அழகி தாரணி காளிங்கராயரை கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்த காளிதாஸ் ஜெயராம், திருமணத்திற்கு இரு விட்டாரின் சம்மதத்தையும் பெற்ற நிலையில் இவரது திருமணத்திற்காக ஜெயராம் தொடர்ந்து ஏற்பாடுகளை செய்து வருகிறார்
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு: கடந்த மே மாதத்தில் ஜெயராமின் மகள் மாளவிகாவிற்கும் பாலக்காட்டை சேர்ந்த நவநீத் கிரிஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து 6 மாதத்திலேயே மகனுக்கும் திருமண ஏற்பாடுகளை ஜெயராம் செய்துள்ளார். இதற்காக பிரபலங்களுக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்து வருகிறார். இதனிடையே, இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகனின் திருமணத்திற்காக அழைப்பு விடுத்துள்ளார் ஜெயராம். இந்த சந்திப்பின்போது முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். ஜெயராமும் தன்னுடைய மனைவி பார்வதி மற்றும் மகன் காளிதாஸ் உள்ளிட்டவர்களுடன் நேரில் சென்று முதல்வருக்கு திருமண அழைப்பை விடுத்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம் உற்சாகப்பதிவு: திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்னும் 10 நாள்தான் என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவர் மணக்கவுள்ள தாரணி காளிங்கராயன் நீலகிரியை சேர்ந்தவர். மிஸ் தமிழ்நாடு, மிஸ் யூனிவர்ஸ் ஆகிய போட்டிகளில் பங்கேற்றவர். தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்தவர். கடந்த ஆண்டில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்னும் சில தினங்களில் திருமணமும் நடக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











