Vijay: துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த மலையாள சூப்பர் ஹீரோ!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டது. இதில் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்தப்படத்தின் சூட்டிங் இன்றைய தினம் பாடல் காட்சியுடன் துவங்கியுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் ராஜு சுந்தரம் நடனம் அமைக்கவுள்ளார்.

தளபதி 68 படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை இணைத்து படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார் வெங்கட் பிரபு.

Actor Jayaram joined with Vijay after 10 years in Thalapathy68 movie

துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்த சூப்பர் ஹீரோ: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இருந்தபோதிலும் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், இரண்டாவது சிங்கிள் என அடுத்தடுத்து வெளியாகி வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 5ம் தேதி படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக வெளியான சஞ்சய் தத், அர்ஜூன் போன்றவர்களின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் அதிரடியாக அமைந்தன.

அந்த வகையில் படத்தின் ட்ரெயிலரும் மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தளபதி68 படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் இன்றைய தினம் பாடல் காட்சியுடன் துவங்கியுள்ளது. இந்த பாடல் காட்சிக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் கொரியோகிராப் செய்யவுள்ளார்.

மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ் போன்றவர்கள் படத்தில் இணைந்துள்ளனர். இதில் புதிய இணைப்பாக மலையாள நடிகர் ஜெயராமும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெயராம் நடித்திருந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Actor Jayaram joined with Vijay after 10 years in Thalapathy68 movie

இதேபோல ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த மைக் மோகன், தற்போது விஜய் படத்தில் இணைந்துள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தில் அவருக்கு மிகச்சிறப்பான கேரக்டர் என்றும், விஜய்யுடன் படம் முழுக்க அவர் பயணிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, அபர்ணா தாஸ் போன்றவர்களும் இணைந்துள்ளனர். பிரியங்கா மோகன் படத்தில் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் அவரும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின்மூலம் லைலா, விஜய்யுடன் முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படியாக பிரபல நடிகர்கள் தளபதி 68 படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். முன்னதாக லியோ படத்தில் அதிகமான கேரக்டர்கள் இருக்கும் நிலையில், தற்போது அந்த நட்கத்திர பட்டாளத்தையே மிஞ்சும் வகையில் தளபதி 68 படத்தில் ஏராளமான நடிகர்கள் இணைந்துள்ளனர். இதனால் படத்தில் அவர்களுக்கு எத்தகைய கேரக்டர்கள் கொடுக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிமாக எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X