அமோக வெற்றி பெற்ற ஸ்டாலின்.. நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் சென்று நேரில் வாழ்த்து!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ஜெயராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களிலும் திமுக தனித்து 130க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா பரவலை முன்னிட்டு ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இரண்டாவது நாளாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரபல நடிகரான ஜெயராம், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயராம் தன் மகன் காளிதாஸ் ஜெயராமுடன் சென்று வாழ்த்து கூறினார். ஏற்கனவே நடிகர் சூரி, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











