நிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் அவரின் குடும்பத்தாரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரளாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மாநிலத்தில் உள்ள 33 அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளக்காடானது கேரளா.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நடிகர் ஜெயராம், அவரின் மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோர் நிலச்சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
ஜெயராம் தனது மனைவி மற்றும் மகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கிரமாப் பகுதியில் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிய ஜெயராமின் கார் செயல் இழந்தது. இது குறித்து தகவல் அறிந்த வடக்கன்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராம் குடும்பத்தாரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தன் குடும்பத்தை காப்பாற்றிய போலீசார் மற்றும் முதல்வருக்கு ஜெயராம் நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜெயராம் தொடர்ந்து உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











