விவசாயியாக மாறிய ஜெயராம்.. எவ்வளவு காய்கறிகளை அள்ளிட்டு வராரு பாருங்க!

திருவனந்தபுரம் : மலையாள நடிகராக இருந்தாலும் தமிழிலும் அதிகமான படங்களில் நடித்து ஏராளமான தமிழ் ரசிகர்களை பெற்றவர் நடிகர் ஜெயராம்.

சமீபத்தில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியானது. இந்தப் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கேரக்டரில் ஜெயராம் நடித்திருந்தார்.

மலையாளத்திலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ஜெயராம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம் அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனுடன் தெனாலி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்து தன்னுடைய காமெடி சென்ஸ், சிறப்பான உடல்மொழியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஜெயராம். முறைமாமன், புருஷலட்சணம், பரிவட்டம், பெரிய இடத்து மாப்பிள்ளை, பரமசிவன், துப்பாக்கி, உத்தம வில்லன் போன்ற படங்களில் இவர் தமிழில் நடித்துள்ளார்.

ஆழ்வார்க்கடியான நம்பி கேரக்டர்

ஆழ்வார்க்கடியான நம்பி கேரக்டர்

தன்னுடைய படங்களில் மலையாளம் கலந்த தமிழில் பேசுவார் ஜெயராம். இந்த தமிழுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ஜெயராம், கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கேரக்டரில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் கார்த்தி, ஜெயராம் இடையிலான காம்பினேஷன் காட்சிகள் பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.

ஜெயராம் மகிழ்ச்சி

ஜெயராம் மகிழ்ச்சி

இந்தப் படத்தின் அடுத்த பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீடு வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயராம், மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய வாழ்நாள் கனவு இந்தப் படத்தின்மூலம் நிறைவேறியதாக தெரிவித்தார். மேலும் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வரலாறு சார்ந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

ஒன்றரை வருடங்கள் மொட்டை

ஒன்றரை வருடங்கள் மொட்டை

இந்தக் கேரக்டரில் நடிப்பதற்காக ஒன்றரை வருடங்கள் தான் மொட்டையுடன் திரிந்ததாகவும் வெறும் குடுமி மட்டுமே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். மணிரத்னம் போன்ற இயக்குநரிடம் பணி செய்வது வேறு மாதிரியான அனுபவம் என்றும் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கூறியுள்ள ஜெயராம், ஷுட்டிங் இல்லாதபோது மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணியாற்ற தான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ வெளியிட்ட ஜெயராம்

வீடியோ வெளியிட்ட ஜெயராம்

பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஜெயராம் கேரக்டர் எப்படி விரிவுப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பெரிய வீட்டுத் தோட்டம்

பெரிய வீட்டுத் தோட்டம்

தன்னுடைய வீட்டில் உள்ள தோட்டத்தில் இருந்து ஏராளமான காய்கறிகளை அவர் பறித்து கூடையில் வைத்து எடுத்து வருவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. பெரிய நடிகராக இருந்தாலும் தலையில் கட்டிய முண்டாசுடன் அவர் தனது தோட்டத்திலேயே விவசாயியாக மாறிய இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அவரின் இந்த அழகிய பெரிய தோட்டத்திற்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X