Kalidas marriage: ஜெயராம் வெளியிட்ட குடும்ப புகைப்படம்.. மூணு ஜோடியும் சூப்பரா இருக்கே!

குருவாயூர்: நடிகர் ஜெயராமின் மகனும் பிரபல நடிகருமான காளிதாஸ் ஜெயராம் தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான விக்ரம், ராயன் உள்ளிட்ட படங்கள் சிறப்பான கவனத்தை பெற்றன. அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனிடையே இன்றைய தினம் காளிதாஸ் ஜெயராமிற்கும் பிரபல மாடல் தாரிணி காளிங்கராயனுக்கும் குருவாயூர் கோயிலில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். கடந்த ஆண்டில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.

jayaram kalidas jayaram dharini kalingarayan

நடிகர் ஜெயராம்: நடிகர் ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை தமிழிலும் உருவாக்கியவர். தற்போதும் தமிழில் நடித்து வருகிறார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் இவர், மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். கமல்ஹாசனுடன் விக்ரம், தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ராயன் போன்ற படங்களில் இவரது கேரக்டர் வரவேற்பை பெற்றது.

காளிதாஸ் -தாரிணி திருமணம்: அடுத்தடுத்து படங்கள், வெப் தொடர்களில் நடித்து வரும் இவர் பிரபல மாடல் தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜெயராம் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகை அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் இன்றைய தினம் குருவாயூர் கோயிலில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணியின் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

jayaram kalidas jayaram dharini kalingarayan

நெகிழ்ச்சியடைந்த ஜெயராம்: இதில் நடிகர் சுரேஷ் கோபி, அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் மற்றும் அவரது மனைவி இவர்களுடன் திரைத்துறையினர் பலரும் கலந்துக் கொண்டனர். முன்னதாக இவர்களின் ப்ரீ வெட்டிங்கும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டிய நிலையில், இன்றைய தினம் பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் குருவாயூர் கோயிலில் நடந்துள்ளது. இதன்போது தன்னுடைய மகன் மற்றும் மருமகளின் கைகளை பிடித்துக் கொண்டு நடிகர் ஜெயராம் எமோஷனலானதை பார்க்க முடிந்தது தொடர்ந்து தன்னுடைய மகன், மருமகள், மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் இணைந்து ஜெயராம் குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார்.

குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட ஜெயராம்: காலை முதல் பல்வேறு நிகழ்வுகள் நடந்த நிலையில் இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயராம் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் புதுமண தம்பதியுடன் ஜெயராம் மற்றும் அவரது மகள் என மூன்று தம்பதியும் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருந்தார் ஜெயராம். இந்நிலையில் தன்னுடைய மகனின் திருமணத்தையும் நடத்தி முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X