பொன்னியின் செல்வன் முதல்நாள் முதல் ஷோவை விசிலடிச்சு பாக்கணும்.. ஜெயராமின் வேற லெவல் ஆசை!

சென்னை : நடிகர் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

இந்தப் படம் இன்னும் சில தினங்களில் அதாவது செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் இன்னும் 9 நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை லைகாவுடன் சேர்ந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசும் தயாரித்துள்ளது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

மணிரத்னத்தின் கனவு பிராஜக்டான பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படங்களின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது பாகமும் அடுத்த 9 மாதங்களில் வெளியாகவுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான வெளியீடு

பிரம்மாண்டமான வெளியீடு

அதேபோல படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் உள்ளிட்டவையும் சென்னை மற்றும் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் திரையுலக ஜாம்பவான்கள் கமல் மற்றும் ரஜினி இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

ஏஆர் ரஹ்மான் இசையில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்தப் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் மட்டுமில்லாமல் படத்திற்கான பிரமோஷனல் டூரிலும் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் படத்திற்கான சிறப்பான பிரமோஷனைத் தந்துள்ளது.

பிரமோஷனல் டூர்

பிரமோஷனல் டூர்

இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கான புக்கிங்குகள் அமெரிக்காவில் துவங்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் துவக்கினர்.

திருவனந்தபுரத்தில் பிரமோஷன்

திருவனந்தபுரத்தில் பிரமோஷன்

இதனிடையே நேற்றைய தினம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டனர். தனிப்பட்ட முறையிலும் பிரமோஷனின் ஒரு பகுதியாக பேட்டிகளையும் விவாத நிகழ்ச்சிகளையும் படக்குழுவினர் தந்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு விவாதத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு படத்தின் சிறப்பை கூறினர்.

ஜெயராமின் சிறப்பான ஆசை

ஜெயராமின் சிறப்பான ஆசை

அப்போது நடிகர் ஜெயராம், இந்தப் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு துவங்கவுள்ள நிலையில், முதல் நாள் முதல் ஷோவில் சென்று ரசிகர்களுடன் விசிலடித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். குறிப்பாக பொன்னி நதி பாடலுக்கு விசிலடித்து பார்க்க வேண்டும் என்றும் தன்னுடைய எதிர்பார்ப்பை கூறினார்.

கார்த்தியின் விருப்பம்

கார்த்தியின் விருப்பம்

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, எல்லாரும் ஒன்றாக அமர்ந்து ஐநாக்சில் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். மணிரத்னத்திடம் இதுகுறித்து பேச வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து ஜெயம்ரவியும் வெயிட்டிங் வெயிட்டிங் என்று உற்சாகமாக கூறினார். மொத்தத்தில் இந்த விவாதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X