டாய்லெட்டில் வைத்து டார்ச்சர்.. நடிகர் ஜெயசூர்யா மீது நடிகை பகீர் புகார்.. 7 பேர் மீது வழக்கு!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நல்ல சினிமாக்கள் வருகின்றன என்றும் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம், ஆவேஷம், ஆடு ஜீவிதம் என முதல் 6 மாதங்கள் வசூல் மழையாகவும் பாராட்டு மழையாகவும் இருந்த திரையுலகம் அப்படியே பாலியல் குற்றங்கள் நிறைந்த படுமோசமான திரையுலகமாக மாறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என வரிசையாக இதுவரை 7 பேர் மீது பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலையாள திரையுலகில் எடுக்கப்பட்டுள்ள இதே முன்னெடுப்பு மற்ற திரையுலகிலும் வரவேண்டும் என்றும் பலரது நிலைமை படுமோசமாக மாறும் என்றும் நடிகைகள் ஊர்வசி, குஷ்பு உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.

என் மன வானில், வசூல் ராஜா எம்பிபிஎஸ், மனதோடு மழைக்காலம், சக்கர வியூகம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயசூர்யா மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
டாய்லெட்டில் வைத்து டார்ச்சர்: சினிமா படப்பிடிப்பின் போது கழிவறைக்கு சென்று விட்டு நடிகை ஒருவர் திரும்பி வரும்போது, அந்த இடத்தில் நின்றுக் கொண்டு அவரிடம் அத்துமீறி படுமோசமாக பாலியல் தொல்லை கொடுத்தார் நடிகர் ஜெயசூர்யா என நடிகை அளித்த புகாரின் பேரில் அந்த நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் காவலர்கள் வாக்குமூலம் வாங்கிய நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 354, 354ஏ மற்றும் 359 பிரிவுகளின் கீழ் ஜெயசூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகைகள் தொடர் குற்றச்சாட்டு: மலையாள திரையுலகின் பிரபல இயக்குநரான சித்திக் மீது நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டு புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் முகேஷ் மற்றும் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நடிகைகளாக தங்களது அடையாளம் வெளியே வராது என அரசு கொடுத்திருக்கும் நம்பிக்கையால் வெளிப்படையாக வந்து நடிகர்கள் தங்களுக்கு இழைத்த குற்றங்கள் பற்றி கூறி வருகின்றனர்.
பயத்தில் பலர்: இதுவரை 7 பிரபலங்கள் மீது பாலியல் புகாரில் வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், மற்ற முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் பயத்தில் இருப்பதாகவும் எப்போது தங்கள் மீது குற்றச்சாட்டுகள் பாயும் என்கிற பீதியில் இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











