Black box office: ரஜினியுடன் மோதிய ஜீவா.. பிளாக் படத்தின் முதல் நாள் வசூல்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜீவாவின் நடிப்பில் உருவான திரைப்படம் பிளாக். ரஜினியின் வேட்டையன் படத்துடன் 10ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், இப்படம் நேற்று வெளியானது. திகிலூட்டும் மர்மம் நிறைந்த படமாக வெளியாகி உள்ள இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை பார்க்கலாம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர், கணிசமான திரைப்படத்தை கையில் வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மோசமான விமர்சனத்திற்குள் உள்ளானது. இதைத்தொடர்ந்து, டிமாண்டி காலனி 2 திரைப்படம் பிரியாவிற்கு நல்ல பெயரையும், நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது பிளாக் திரைப்படம் வெளியாகி உள்ளது.

பிளாக் திரைப்படம்: கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட்டில் திரைப்படத்தில் சில காட்சிகளை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி சில மாற்றத்தை செய்து, இயக்குநர் கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் என பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் கதை: ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதியினர், கடற்கரைப் பகுதியில் புதியதாக வாங்கிய வீட்டிற்கு விடுமுறை தினத்தை கழிக்க வருகின்றனர். அந்த பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த போதும், அதில் வீட்டில் யாரும் குடியேறவில்லை. இவர்கள் அந்த வீட்டிற்கு சென்ற நாளில் இருந்து, தொடர்ந்து மர்மமான சில விஷயங்கள் நடக்கிறது. இதனால், ஜீவா- பிரியா பவானி சங்கர் இருவரும் அந்த வீட்டிலிருந்து செல்ல முடிவு செய்கின்றனர்.
ஜீவா கம்பேக்: ஆனால், அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே இடத்திலேயே சிக்கி இருக்கிறார்கள். இவர்களைப் போலவே சிலரும் இந்த லூப்பில் சிக்கி இருப்பது இவர்களுக்கு தெரியவருகிறது. கடைசியில் ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதி தப்பித்தார்களா? அந்த வீட்டில் அப்படி என்ன தான் மர்மம் இருக்கிறது என்பது தான் படத்தின் கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவா இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாகவே அமைந்துள்ளது. ஜீவாவிற்கு ஈடு கொடுத்து பிரியா பவானி சங்கரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
முதல் நாள் வசூல்: ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில், சில காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது. மேலும், சுவாரசியமான கதையை சயின்ஸ் பிக்சனாக இயக்குனர் காண்பித்து ரசிகர்களை திருப்தி படுத்தி இருக்கிறார் எனலாம். வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் முதல் நாளில் ரூ. 65 லட்சத்தை வசூலித்துள்ளது. வேட்டையன் படம் 10ந் தேதி வெளியான நிலையில், இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. ரஜினி படத்துடன் மோத பயந்து சூர்யாவின் கங்குவா திரைப்படமே பின் வாங்கிய நிலையில்,நடிகர் ஜீவா தைரியாக பிளாக் திரைப்படத்தை வெளியிட்டு கெத்து காட்டி இருக்கிறார் என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications