முதல் ஆளாக நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து.. ஜீவா மகிழ்ச்சி

சென்னை : நடிகர் ஜீவாவின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.

நடிகர் சதீஷூம் ஜீவாவும் நெருங்கிய நண்பர்கள், இவர்கள் இருவரும் இணைந்து கலகலப்பு 2 மற்றும் கொரில்லா ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மூன்றாவது படம் சீறு இனிமேல் தான் வெளிவர இருக்கிறது.

Actor Jeeva birthday wish

சீறு படத்தை பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கி இருக்கிறார். இந்த படம் முதலில் டிசம்பர் மாதம் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டது சில காரணங்களால் தற்போது படம் தள்ளி போய் இருக்கிறது

நடிகர் ஜீவாவின் பிறந்த நாளான இன்று, முதல் ஆளாக சமூக வலைத்தளத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் நடிகர் சதீஷ். நடிகர் சதீஷ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சென்னை சேப்பாக்க மைதானத்தில் இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவேற்றி வாழ்த்து கூறியிருக்கிறார் .

Actor Jeeva birthday wish

சதீஷ் கூறுகையில் எனக்கு தெரிந்த சிறந்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் இந்த வருடத்தில் நிறைய வெற்றிகளை பெற வாழ்த்துகள் என்று ஜீவாவை வாழ்த்தி உள்ளார்.

சதீஷ் அடுத்ததாக நகைச்சுவை நாயகனாக கிட்டதட்ட 10ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்திலும் சதீஷ் ஒப்பந்தமாகிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவிற்கு சரியான வெற்றி படங்கள் சில வருடங்களாக இல்லாததால் பலரும் அவரை மறந்து விட்டனர் என்றே கூறலாம். ஆனால் சதீஷ் தனது நண்பனுக்கு வாழ்த்துக்கூற மறக்கவில்லை . முதல் ஆளாக இவர் வாழ்த்து கூறியதை நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X