Don't Miss!
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் இணையும் சூப்பர் கூட்டணி... அடுத்த கலாட்டாவிற்கு தயாராகும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் ஜீவா மற்றும் டைரக்டர் ராஜேஷ் கூட்டணியில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் சிவா மனசுல சக்தி.
காமெடி கலாட்டாவாக வெளியான இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் பெரிதளவில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் ஜீவா மற்றும் ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில்
இனவெறி
அதிகம்..
கருப்பாக
இருக்கும்
நடிகைகளுக்கு
வாய்ப்பு
இல்லை..
ரஜினி
பட
நடிகர்
பகீர்!

சிவா மனசுல சக்தி படம்
டைரக்டர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா இணைந்து கலக்கிய சிவா மனசுல சக்தி படம் கடந்த 2009ல் வெளிவந்து பட்டையை கிளப்பியது. காமெடி சரவெடியாக வெளிவந்த இந்தப் படம் சிறப்பான காமெடி காட்சிகளை கொண்டு ரசிகர்களை கட்டிப் போட்டது.

ஜீவா -சந்தானம் கூட்டணி
படத்தில் ஜீவா -சந்தானம் கூட்டணி காமெடியில் கலக்கியது. இருவரும் காமெடியில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்றன. படத்தில் மேலும் அனுயா, ஊர்வசி, ஞான சம்பந்தம் உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

சிறப்பான நாயகி
மேலும் நாயகி அனுயாவின் நடிப்பும் படத்தில் சிறப்பாக இருந்தது. படத்தின் சிறப்பான நகர்வுக்கு அவர் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். நடிகை ஊர்வசியும் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக நடித்திருந்தார். இன்றுவரை ரசிகர்களுக்கு பிடித்தமான காமெடியை படம் கொண்டிருந்தது.

புதிய படப்பூஜை
தற்போது மீம்களுக்கும் இந்தக் காமெடி பயன்பட்டு வருகிறது. தொடர்ந்து பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் தற்போது மீண்டும் ஜீவாவுடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் கலக்கும் புதிய படத்திற்கான பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு
இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் அமையும் பட்சத்தில் ரசிகர்களுக்கு சிறப்பான காமெடி விருந்தாக படம் அமையும்.

சிறப்பான கூட்டணி
நடிகர் ஜீவாவும் கலகலப்பு 2 படத்திற்கு பிறகு 83, நீ நல்லா வருவடா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷுடன் இணைந்து அவர் படம் செய்யும் பட்சத்தில் அது அவருக்கு சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.