Jeeva :முதலமைச்சராக நடிகர் ஜீவா.. எந்த படத்துல தெரியுமா?
சென்னை :ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் கடந்த 2019ம் ஆண்டில் ரிலீசானது.
இந்தப் படத்தில் ஒய்எஸ்ஆராக மம்முட்டி நடித்திருந்தார். மஹி ராகவ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்திலும் ஒய்எஸ்ஆராக மம்முட்டியே நடிக்கவுள்ளார்.
ஒய்எஸ்ஆர் பயோபிக்கில் கமிட்டாகியுள்ள ஜீவா : ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கடந்த 2019ம் ஆண்டில் யாத்ரா என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. மஹி ராகவ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில் நடிகர் மம்முட்டி இந்தப் படத்தில் ஒய்எஸ்ஆராக நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அதற்கான முன் தயாரிப்பு பணியில் படத்தின் இயக்குநர் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் பாகத்தில் ஒய்எஸ்ஆரின் வாழ்க்கை முழுவதும் கூறப்படவில்லை. மாறாக அவர் கடந்த 2003ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பாத யாத்திரையையும் அதன்மூலம் ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தையும் மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக உருவாகவுள்ள இந்தப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் மம்முட்டியே ஒய்எஸ்ஆராக நடிக்கவுள்ளார். YSR ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒய்எஸ்ஆரின் மகனாக ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அந்த கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் இறந்த காலகட்டத்தில் இருந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் மம்முட்டி, சுகாசினி மணிரத்னம், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் மூன்று நாட்களிலேயே அதிகமான வசூல் சாதனை புரிந்தது. இதையடுத்தே தற்போது படத்தின் இரண்டாவது பாகமும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் படமும் முதல் பாகத்தை போலவே ரசிகர்களை கவர்ந்து வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆந்திர முதல்வர்களில் என்டிஆருக்கு பிறகு மக்களின் செல்வாக்கு அதிகம் கொண்ட அரசியல்வாதியாக ராஜசேகர ரெட்டி அறியப்படுகிறார். இந்தப் படத்தினை ஒய்எஸ்ஆர் மகள் ஷாஷி தேவி தயாரித்திருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக 28 கோடி ரூபாயை வசூலித்தது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிகர் ப்ரதிக் காந்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜீவா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











