நான் போட்டுக்கிட்டேன்...நீங்க....கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜீவா
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் மகன் தான் நடிகர் ஜீவா. இவர் 2003 ம் ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

2005 ல் இவர் நடித்த ராம் படம், மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்திற்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதினை பெற்ற ஒரே தமிழ் நடிகர் ஜீவா மட்டும் தான்.
தொடர்ந்து இவர் நடித்த ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், நீ தானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, களத்தில் சந்திப்போம் ஆகியன வெற்றி படங்களாக அமைந்தன. இதுவரை 43 படங்களில் நடித்துள்ள ஜீவா, தற்போது 83 என்ற இந்தி படத்திலும், மேதாவி என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

37 வயதாகும் ஜீவா, இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். அத்துடன் இவர், நான் எனக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். அப்போ நீங்க...என்ற கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ஜீவாவின் இந்த பதிவை ஏராளமானோர் லைக் செய்து, கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











