உள்ளே போ.. ஊரடங்கை மதிக்காதவர்களுக்காக டிவிட்டர் கணக்கின் பெயரை மாற்றிய பிரபல நடிகர்!

சென்னை: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்காக பிரபல நடிகர் தனது டிவிட்டர் கணக்கின் பெயரை அதிரடியாக மாற்றியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. மிரட்டும் கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகம் முழுக்க 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Actor Jeeva has changed his twitter handle name as ulle Po for against corona virus

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தங்களின் மக்களை காக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. கொரோனாவுக்கு 3 உயிர்களை பறிகொடுத்துள்ள இந்தியாவும் மக்களை காக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Actor Jeeva has changed his twitter handle name as ulle Po for against corona virus

அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் இதனை முறையாக கடைபிடிக்காமலும் கொரோனா வைரஸின் சீரியஸ்னஸை உணராமல் ஊர் சுற்றி வருகின்றனர்.

வெளியில் ஊர் சுற்றும் மக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஜீவா, டிவிட்டர் கணக்கில் தனது பெயரை உள்ளே போ என மாற்றியிருக்கிறார். மக்கள் பாதுகாப்பாக உள்ளே இருக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் நடிகர் ஜீவா தனது பெயரை மாற்றியிருக்கிறார். மேலும் கொரோனாவுக்கு எதிராகவும் பல டிவிட்டுகளை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X