சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படம் விஜய் கூட தான்..ஜீவா சொன்ன குட் நியூஸ்!
சென்னை : சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படம் விஜய் கூடத்தான் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரியின் மகன் தான் ஜீவா. இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்த படம் ஜீவாவுக்கு நல்லத்தொடங்கமாக அமைந்து அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா அமீர் இயக்கத்தில் நடித்த ராம் திரைப்டம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம். அதற்கு பின்னர் டிஷ்ஷும், ஈ, கற்றது தமிழ், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம்,சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை போன்ற வெற்றிப்படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

கோல்மால்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா இந்த ஆண்டு தொடக்கத்தில் 83 என்னும் ஹிந்தி திரைப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா கோல்மால், வரலாறு முக்கியம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

சர்க்கார் வித் ஜீவா
நடிகர் ஜீவா, ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். நேற்று ஆஹா பட விழாவில் பேசிய ஜீவா, என்னுடைய 20 வருஷ சினிமா பயணத்தில் சில பெரிய ஹிட் படங்களையும், வசூலையும் படங்களையும் கொடுத்திருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனா, நிறைய புது திறமைசாலிகளுடன் வேலை செய்திருக்கிறேன். இப்பக்குகூட நான்கு இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறேன், அதில் இரு படங்கள் அறிமுக இயக்குநரின் படம் என்றார்.

96 படங்கள்
தொடர்ந்து பேசிய ஜீவா, எங்க அப்பாவிடம் ஒருமுறை நீங்க இவ்வளவு இயக்குநர்களை அறிமுகப்படுத்திருக்கீங்க. பெரிய இயக்குநர்களின் கூட்டணியில் நிறைய படங்களை பண்ணியிருக்கலாமேனு கேட்டேன். அதுக்கு எங்க அப்பா, சூப்பர் குட் நிறுவனம் புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தியதால் தான் இன்னைக்கு 96 படங்கள் வரை வளர்ந்திருக்கு என்று சொன்னார்.

100வது படம் விஜய் கூட தான்
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் விரைவில் நூறாவது படத்தைத் தயாரிக்கிறது. அதில், விஜய் சாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போன வாரம் தான் விஜய்கிட்ட பேசினோம். எங்க அப்பாகிட்ட நானும் அந்தப் படத்தில் நடிக்கட்டுமா என்று கேட்டிருக்கேன். கடவுள் அருளால் 100வது படத்தில் விஜய் சார் தான் நடிப்பார் என்றார்.


Click it and Unblock the Notifications











