ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராக இருந்த ஒரு நடிகர் ஜீவா இப்போது கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து இந்தியில் அறிமுகமாக உள்ளார்.
ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்து அனைவரையும் பிரமிக்க வைத்து வந்த ஜீவா சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வழியில் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதியன்று ஜீவா தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

கற்றது தமிழ்
முதல் படத்தில் அறிமுகமானதைப் போலவே இன்றும் அதே துடிப்புடன் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் நேர்த்தியாக செய்து முடிக்கும் நடிகர் ஜீவா ராம், கற்றது தமிழ் ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து இருந்தார்.

மாஸ் ஓபனிங்
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ஜீவாவின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸை கலக்கி வந்த நிலையில் டிஷ்யூம்,சிவாமனசுலசக்தி, கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியல் ரீதியாகவும் இவருக்கு மிகப்பெரிய மாஸ் ஓபனிங்கை கொடுத்தது.

சுமாரான வெற்றி
மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ள ஜீவாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்த நிலையில் அதன் பிறகு வெளியான படங்களும் சுமாரான வெற்றியையும் தோல்வியையும் மட்டுமே பெற்றது.

பாலிவுட்டிலும் என்டரி
இந்த நிலையில் இன்றுவரை பழைய ஃபார்முக்கு வர பல்வேறு வழிகளில் போராடி விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஜீவா தெலுங்கு மற்றும் மலையாளம் என வேற்று மொழிகளிலும் ஒரு சில திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே இதுவரை வந்து சென்ற நிலையில் இப்போது இந்தியில் முழுநீள கதாபாத்திரத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்டரி கொடுக்க உள்ளார்.

பிறந்தநாள்
முன்னணி இயக்குனர்கள் மட்டுமல்லாமல் அறிமுக இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ஜீவாவுக்கு களத்தில் சந்திப்போம், நீ நல்லா வருவடா, ஜெமினி கணேசன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளியாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி தனது ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இணையதளத்தை அதிர வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











