twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி தமிழர்களுக்கு ஒண்ணுமே செய்யவில்லையா ? - பட்டியலிடுகிறார் நடிகர் ஜீவா

    By Shankar
    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு இது வரை எதுவுமே செய்யவில்லை என்ற கருத்தை மறுத்துள்ளார் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஜீவா. ரஜினி இதுவரையிலும் என்னென்ன செய்துள்ளார் என்றும் பட்டியலிட்டுள்ளார்.

    Actor Jeeva listed activities of Rajini supporting Tamils

    1983-ல்...

    1983 ல் இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரும் செய்யத் துணியாத ஒரு விஷயத்தை செய்தார். அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவை பகிரங்கமாக எதிர்த்தார். ஜெயவர்த்தனாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    மதுரையில் 5000க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் திரண்டு ஜெயவர்த்தானா கொடும்பாவியை எரித்தார்கள். தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரஜினி ரசிகர்களின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. இப்போது ரஜினியை நோக்கி கேள்வி எழுப்பும் தமிழ் தேசியவாதிகள் எல்லாம் அப்போது ஸ்கூல் போய்க் கொண்டிருந்திருப்பார்கள்.

    1992-ல்...

    1992 ல் தமிழர்களை கர்நாடகாவில் தாக்கிய போது., இந்த வன்முறை தொடர்ந்தால் டு நானே தலைமை ஏற்று என் ரசிகர் படையோடு வந்து எதிர்கொள்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார் (கர்நாடகாவில் தமிழர் மீதான வன்முறை ரஜினியின் அறிக்கைக்குப் பிறகு கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது).

    1996-ல்...

    இன்னொன்னு, ரஜினி ஜெயலலிதா மறைந்த பிறகுதான் பேசுறாரு. இருக்கும் போது பேசல்லன்னு சொல்றாங்க. ஜெயலலிதா இருக்கும் போதே 1996 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று சொன்னது இதே ரஜினி சார்தான்!

    அது எவ்வளவு பெரிய தாக்கத்தை அந்த தேர்தலில் உருவாக்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

    அந்த ஒரு கோடி...

    நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுக்கிறேன் என்றாரே. வெறும் வார்த்தை தானே என்று சொல்கிறார்கள். சொன்னதோடு மட்டுமல்லாமல், அந்த பணத்தை அவரது அண்ணன் சத்யநாராயணா அவர்களிடம் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்து, அது குறித்த செய்தி அப்போதே வெளி வந்திருந்தது.

    திட்டம் ஆரம்பிக்கும் போது அந்தப் பணம், வங்கியிலிருந்து நேராக அரசிடம் வழங்கப்படும்.

    இலவச திருமணங்கள்

    படையப்பா படத்தின் போது ராகவேந்திரா மண்டபத்தை பொதுமக்களுக்காக உயில் எழுதி வைத்தார். 1998, 1999, 2000 ஆண்டுகளில், ஆண்டு தோறும் 30 தமிழ் தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்து சீர் வரிசையுடன் ஒரு லட்ச ரூபாய் க்கு நகையாக பொருளாக வழங்கியுள்ளார்.

    எத்தனையோ மாநகராட்சி பள்ளிக்களுக்கு புத்தகம், டேபிள்கள் என உதவிகள் செய்து வருகிறார். மழை வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்திற்கு 20 லட்சம் ரூபாய்க்கு நேரடியாக நிவாரண உதவி செய்யப்பட்டது. அகில இந்திய ரசிகர் மன்றத்தின் சார்பில் அண்ணன் சுதாகர் நேரடி கண்காணிப்பில் இந்த பணி நடைபெற்றது.

    இந்த மழை வெள்ளத்தின் போது ரஜினி

    இப்படி எவ்வளவோ விஷயங்களை தமிழக மக்களுக்காக அவர் செய்துள்ளார். இடது கை கொடுப்பதை வலது கை அறியக்கூடாது என்று நினைப்பவர் அவர். மக்களுக்கு என்ன செய்தார் என்று கேட்கும் போது, எல்லாமும் தெரிந்த நாங்கள் இனியும் சும்மா இருக்க முடியுமா?," என்று பட்டியலிட்டுள்ளார் ஜீவா.

    இலங்கை யுத்தத்தின் போது, மூன்று படைகள் வச்சிருருந்தாலும் நீங்கள் விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஆம்பளைகளா என்று சிங்கள ராஜபக்ஷே அரசை நேரடியாக கேட்டார் ரஜினி. ஈழத்தில் தமிழ் மக்கள் புதைக்கப்படவில்லை... விதைக்கப்பட்டுள்ளனர்... அந்த மண்ணுக்கு அவர்கள்தான் உரிமையானவர்கள்.. அவர்களிடமே கொடுத்துவிடுங்கள் என்றார். இதனை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "எங்கள் மண்ணின் கள யதார்த்தத்தைப் பேசியுள்ளார் திரு ரஜினிகாந்த். அவருக்கு நன்றி," என்று கூறினார். இதை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா நடேசன் தனி அறிக்கையாகவே வெளியிட்டார் 2009 நவம்பர் மாதம்.

    இப்படி எவ்வளவோ அவர் செய்திருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு என்ன செய்தார் என்று கேள்வியை எழுப்புவது சரிதானா?

    சோஷியல் மீடியாவில் ஒரு வித மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஒரு சில குறிப்பிட்டவர்களின் கருத்துதான், ஒட்டு மொத்த தமிழக மக்களின் கருத்து இல்லை," என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

    English summary
    Actor Jeeva has listed the support and help by Rajinikanth to Tamil society during the past several years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X