இப்ப பாம்பாட்டம்... அப்புறம் சன்னி லியோன் நடிக்கும் த்ரில்லர்... மகிழ்ச்சியில் இயக்குனர்

By

சென்னை: ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் படத்தை முடித்துவிட்டு, சன்னி லியோன் நடிக்கும் படத்தை இயக்குகிறேன் என்று இயக்குனர் வடிவுடையான் சொன்னார்.

காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா உட்பட சில படங்களில் நடித்தவர் ஜீவன்.

இவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு, பாம்பாட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் தயாராகிறது. ஜீவனுக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி ஹீரோயின் ஒருவர் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை.

திகில் படம்

திகில் படம்

மிரட்டும் திகில் படமான இதை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, இது விறுவிறுப்பானத் திரைக்கதையை கொண்ட படம் என்றார்.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

அவர் மேலும் கூறும்போது, படத்தில் கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. 5 மொழி படங்களிலும் முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கேற்கிறார்கள். அதற்கான தேர்வு நடந்து வருகிறது. யுகபாரதி பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார்.

பழனிவேல்

பழனிவேல்

6.2, ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை தயாரித்த வி.பழனிவேல், தயாரிக்கிறார். பண்ணை இளங்கோவன் இணை தயாரிப்பு செய்கிறார். வரும் 22 ஆம் தேதி சென்னையில் ஷூட்டிங் தொடங்குகிறது என்றார்.

சன்னிலியோன்

சன்னிலியோன்

இந்தப் படத்தை முடித்துவிட்டு சன்னி லியோன் நடிக்கும் பொலிட்டிக்கல் த்ரில்லர் படத்தை இயக்க இருக்கிறேன். சன்னிலியோனிடம் கதை சொல்லிவிட்டேன். விரைவில் அது பற்றி முடிவாகும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X