ஜோசியத்தை நம்பி ஏமாந்த ஜீவன்.. லோகேஷ் கனகராஜ் பாவம்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: ஜோசியத்தை நம்பி படவாய்ப்பை இழந்தவர் நடிகர் ஜீவன் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யுனிவர்சிட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜீவன் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

actor jeevans cinema career shared by Valaipechu Anthanan interview

அதன்பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில் வில்லனாக மிரட்டினார். பின் திருட்டு பயலே, நான் அவன் இல்லை ஆகியபடங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் ஜீவன்: அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் கலக்கி வந்த ஜீவன், கடந்த 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தணன்.

ஜோசிய பைத்தியம்: தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் ஜீவன் நடிக்கிறார் என்கிற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஜீவனை லோகேஷ் எந்த அளவிற்கு ஹேன்டில் செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. ஏன் என்றால், ஜீவன் பெரிய நட்சத்திரமாக வரவேண்டிய நடிகர். அவர் பெரிய இடத்தை தொடமுடியாததற்கு காரணம் ஜோசியம்.

படவாய்ப்பு இல்லை: ஜோசியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் 24 மணி நேரமும் ஜோசியம் பார்த்துக்கொண்டு இருப்பார். படப்பிடிப்பு தளத்திலேயே ஜோசியத்தை பார்க்கக்கூடியவர். இந்த காரணத்தினால்தான் அவருக்கு பல பட வாய்ப்பு பறிபோனது. இந்த இயக்குநர் படத்தில் நடித்தால் கட்டம் சரியாக இருக்காது என்று பல படத்தில் நடிக்கவில்லை. கடைசியில் அவருக்கு படவாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.

லோகேஷ் கனகராஜ் பாவம்: அதே போல லோகேஷ் கனராஜின் தலைவர் 171 படத்தில் ஜீவனை ஒப்பந்தம் செய்தார்கள் என்றால், தினமும் ஜோசியம் பார்த்துவிட்டுத்தான் படப்பிடிப்புக்கே வருவார். இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதியான தகவலாக இருந்தால், லோகேஷ் கனகராஜ் தான் பாவம் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X