»   »  "ஜெயம் ரவி"யின் பிறந்தநாள் "போட்டிபோட்டு" ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்

"ஜெயம் ரவி"யின் பிறந்தநாள் "போட்டிபோட்டு" ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாயகன் ஜெயம் ரவியின் 35 வது பிறந்த நாள் இன்று, ஊரே அவரது பிறந்தநாளிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மனிதர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.

சற்று நேரத்திற்கு முன்பு ட்விட்டருக்கு வந்த ஜெயம் ரவி வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து வருகிறார். மேலும் இன்று முழுவதும் போனை எடுக்கக் கூடாது என்று மனைவி கூறியதால் யாருடைய வாழ்த்துக்களையும் தன்னால் ஏற்க முடியவில்லை என்று விளக்கமளித்து இருக்கிறார்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் தனித்தனியாக ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார் அவற்றில் இருந்து சில சுவாரசியமான பதிவுகளை இங்கே காணலாம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா - அரவிந்த் சுவாமி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா. நிறைய பேரின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் இந்த வருடம் உனக்கு ஒரு மிகச்சிறந்த வருடமாக மாறட்டும் " என்று ஜெயம் ரவியை வாழ்த்தியிருக்கிறார் அரவிந்த் சாமி.

மிகவும் நன்றி சகோதரா எல்லாப் புகழும் உங்களுக்கே என்று பதிலளித்திருக்கிறார் ஜெயம் ரவி.

நன்றி சித்தார்த் அபிமன்யு

சித்தார்த் அபிமன்யு இங்கேயும் என்னைக் கண்காணிக்க வந்து விட்டீர்களா என்று ஜாலியாக் கேட்டு அரவிந்த் சாமி அனுப்பிய பூங்கொத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி.

அழகான ஜெயம் ரவி - ராதிகா சரத்குமார்

"அழகான ஜெயம் ரவிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று ஜெயம் ரவியை வாழ்த்தியிருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
ராதிகாவின் வாழ்த்திற்கு நன்றி மேம் என்று பதிலளித்து இருக்கிறார் ஜெயம் ரவி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி - சிபிராஜ்

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி, இன்றைய நாள் தினம் மேலும் ஒரு அழகான நாளாக மாற வாழ்த்துக்கள்" என்று தன் நண்பன் ஜெயம் ரவியை
வாழ்த்தியிருக்கிறார் நடிகர் சிபிராஜ்.

சிபிராஜின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி இன்று முழுவதும் போனை எடுக்கக் கூடாது என்பது எனது மனைவியின் உத்தரவு அதனால் உனது போனை எடுக்க முடியவில்லை மச்சி என்று பதிலளித்திருக்கிறார்.

சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - குஷ்பூ

"எனது அன்பான சகோதரனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், உனது வாழ்வில் அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி ஆகியவை என்றும் நிலைக்க வேண்டும்" ஜெயம் ரவியை வாழ்த்தியிருக்கிறார் நடிகை குஷ்பூ சுந்தர்.

"உங்களது அன்பான வாழ்த்திற்கு மிகவும் நன்றி அக்கா " என்று குஷ்பூவின் வாழ்த்திற்கு பதிலளித்திருக்கிறார் ஜெயம் ரவி.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயநிதி ஸ்டாலின்

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவி. நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைத்து, இந்த வருடம் மேலும் ஒரு சிறந்த வருடமாக மாறிட நான் மனமார வாழ்த்துகிறேன்" என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஜெயம் ரவியை வாழ்த்தியிருக்கிறார்.

நன்றி சகோதரா என்று உதயநிதியின் வாழ்த்திற்கு பதிலளித்திருக்கிறார் ஜெயம் ரவி.

அனைத்து வழிகளும் திறக்க வேண்டும் - கிரிஷ்

எனது நண்பனும் நலம் விரும்பியுமான ஜெயம் ரவிக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ விரும்பும் அனைத்தும் கிடைக்க கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்" என்று மனந்திறந்து தனது நண்பனை வாழ்த்தியிருக்கிறார் பாடகர் கிரிஷ்.

மிகவும் நன்றி மச்சி என்று கிரிஷின் வாழ்த்திற்கு பதிலளித்திருக்கிறார் ஜெயம் ரவி.

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி - ஜெயம் ரவி

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ஒவ்வொரு வருடமும் எனது மனைவி என்னை எதாவது ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து வந்து விடுவார். இந்த வருடமும் அப்படி நாங்கள் வந்திருக்கிறோம், இந்த நாள் எப்போதும் மறக்கமுடியாத ஒரு நாளாக மாறியிருக்கிறது கடவுளுக்கு நன்றிகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து நெகிழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி.

தனி ஒருவன் நாயகனுக்கு மனைவி சொல்லே மந்திரம் போல...

English summary
Actor JeyamRavi Today Celebrating His 35th Birthday - Celebrities Birthday Wishes on his Twitter page.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil