டிச., 20 தரமான சம்பவம் இருக்கு போல.. இந்த 3 மாஸ் ஹீரோக்கள் மோதுறாங்க!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் கைதி மற்றும் விஜய்யின் பிகில் படம் நேரடியாக மோதின.

விஜய்யின் பிகில் 300 கோடி கிளப்பிலும், கார்த்தியின் கைதி 100 கோடி கிளப்பிலும் இணைந்து தப்பித்துக் கொண்டன.

வரும் டிசம்பர் 20ம் தேதி சிவகார்த்திகேயன், கார்த்தி மற்றும் ஜீவா நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

மோதல்

டிசம்பர் 20ம் தேதி பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ ரிலீசாகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் தம்பி படமும் அதே தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த போட்டியில் நடிகர் ஜீவாவின் சீறு படமும் தற்போது இடம்பெற்றுள்ளது.

பேக் டு பேக்

பேக் டு பேக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் இறுதியில் நம்ம வீட்டு பிள்ளை ரிலீசானது. அடுத்ததாக வரும் டிசம்பரில் ஹீரோ படம் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. கார்த்தியின் கைதி திரையரங்குகளில் வெற்றிகரமாக 4வது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தம்பி படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு கொரில்லா படம் வெளியானது. ராஜு முருகன் இயக்கத்தில் ஜிப்ஸி படமும் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த மாதம் சீறு என மூன்று ஹீரோக்களும் பேக் டு பேக் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

யாரோட படம்

யாரோட படம்

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், நவ்தீப் உள்ளிட்டோர் நடிப்பில் சீறு படம் உருவாகியுள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். அதனால், நிச்சயம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

என்ன கதை

என்ன கதை

தலைப்புக்கு ஏற்றவாறு அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு சீறும் இளைஞனாக ஜீவா இந்த படத்தில் நடித்துள்ளார். சீறு படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தன்னை மிகவும் இந்த கதை ஈர்த்ததால், தயாரிக்க முன்வந்ததாகவும், நிச்சயம், சீறு படம் ஜீவாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் எனக் கூறினார்.

More from Filmibeat

Read more about: jiiva ஜீவா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X