Jiiva: பிளாக் படத்தின் எந்த விழாவுக்கும் ஏன் பிரியா பவானி சங்கர் வரவில்லை.. என்ன நடந்தது? ஜீவா ஓபன்

சென்னை: நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் பிளாக். இப்படம் கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட்டில் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக். கோஹரன்ஸ் படத்தினைப் பார்த்த தமிழ் ரசிகர்களே பாராட்டும் அளவிற்கு இப்படத்தினை இயக்கி இருந்தார் இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி. திகில் மற்றும் த்ரில் காட்சிகளால் படம் நிரம்பி இருந்ததை புரிந்து கொண்டு சிறப்பாக இசை அமைத்திருந்தார் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதையடுத்து படகுழு வெற்றி விழா கொண்டாடியது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஜீவா பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வேட்டையன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடைய படம். மேலும் லைகா போன்ற மிகப்பெரிய நிறுவனம் தங்களது படங்களுக்கு கடல் போல தியேட்டர்களில் ரிலீஸ் செய்வார்கள். நாங்கள் குறைந்த அளவிலான தியேட்டரில் ரிலீஸ் செய்தோம். எங்களுடய பட்ஜெட்டும் அதுதான். சிறிய பட்ஜெட் படம் எனவே எங்களுக்கு கிடைத்த தியேட்டர்கள் போதுமானதாக இருந்தது. நாங்கள் வேட்டையன் படத்தோடு படத்தினை ரிலீஸ் செய்யாமல், மற்ற நாட்களில் ரிலீஸ் செய்திருந்தாலும் இதேபோல் குறைந்த அளவிலான தியேட்டரில்தான் ரிலீஸ் செய்திருப்போம்.

jiiva priya bhavani shankar black movie

இதுமட்டும் இல்லாமல் படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் பாராட்டினார்கள். நானும் ரசிகர்களுடன் ரசிகராகத்தான் படத்தினைப் பார்த்தேன். படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒரு கோர்வையாக அல்லது திரைக்கதைப்படி ஒரு காட்சிக்குப் பின் அடுத்த காட்சி என்பதுபோல் படத்தினை எடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காட்சிகளை படமாக்கியதால் நானும் மிகவும் ஆர்வத்துடன் படம் பார்த்தேன்.

jiiva priya bhavani shankar black movie

இந்த ஜாதி: பிளாக் படம் கமர்ஷியல் எலமெண்ட் நிறைந்த படம் இல்லை. இதில் அதிரடிக் காட்சிகளோ, காமெடிக் காட்சிகளோ இல்லை. ரசிகர்கள் மிகவும் சைலண்டாக படத்தினைப் பார்த்தார்கள். படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. நான் டிஷ்யூம் படத்தில் கூட ஒரு டயலாக் பேசியிருப்பேன். அதாவது, ' நாங்க எல்லாம் கைத்தட்டலுக்கு ஏங்கற ஜாதி' என. அதுபோல இன்னும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கின்றது. இன்னும் நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்ற பொறுப்பினைக் கொடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.

jiiva priya bhavani shankar black movie

பிரியா பவானி சங்கர்: மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் ஏன் பிளாக் படத்தின் பிரஸ் மீட் மற்றும் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜீவா பதில அளிக்கையில், " இந்தக் கேள்வியை நீங்கள் பிரியா பவானி சங்கரை நோக்கி கேட்கவேண்டும். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருவேளை அவருக்கு தேதி இல்லாமல் இருந்திருக்கலாம், சொந்த வேலைகள் எதாவது இருந்திருக்கும். அதனால் வரமுடியாமல் போயிருக்கலாம். இதே சூழல் எனக்குமே ஏற்படும். அதனை நாம் கூறமுடியாது இல்லையா" என பதில் அளித்தார்.

jiiva priya bhavani shankar black movie

காரணம்: படம் ரிலீஸ் ஆன பின்னர் பிரியா பவானி சங்கர் படத்தினை மக்கள் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் அவர் தனியாகவே சேனல்களுக்கு பேட்டி அளித்து வருவதால், தயாரிப்பாளருகோ, இயக்குநருக்கோ அல்லது நடிகர் ஜீவாவுக்கோ அவருடன் எதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என பேச்சு அடிபடுகின்றது.

jiiva priya bhavani shankar black movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X