Jiiva Accident: அச்சச்சோ.. கார் விபத்தில் குடும்பத்துடன் சிக்கிய ஜீவா.. அப்பளம் போல நொறுங்கிடுச்சே
கள்ளக்குறிச்சி: ராம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. நடிகர் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் உரிமையாளரான ஆ.பி. சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவா. இவர் தனது குடும்பத்தினருடன் சேலத்திற்குச் சென்று கொண்டு இருந்தபோது, கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலத்திற்கு இடைப்பட்ட இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். ராம், கற்றது தமிழ், ஈ போன்ற மிகவும் ராவான சப்ஜெக்ட் படங்களில் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் பர்ஃபாமிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அந்தஸ்தை தனது சினிமா வாழ்க்கை தொடங்கும்போதே பெற்றவர். அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, டிஷ்யூம், தெனாவட்டு போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடித்து மார்கெட் உள்ள நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டார். இவர் நடித்த படங்களில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் எனக் கூறலாம். குறிப்பாக கோ, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்கள் என்றைக்கும் எவர் க்ரீன் படங்களாகவே உள்ளது.

சமீபகாலமாக கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் ஜீவா தனது மனைவியுடன் சென்னையில் இருந்து, சேலத்திற்கு சொந்த வேலையாக தனது சொகுசுக் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். சென்னையில் இருந்து சேலம் செல்ல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியே அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலத்திற்கு இடையே சென்றுகொண்டு இருக்கும்போது, சாலையின் குறுக்கே திடீரென ஒருவர் வந்துள்ளார்.
விபத்து: குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக மாற்று திசைக்கு திருப்பியுள்ளார் நடிகர் ஜீவா. இதனால் கார், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள கட்டையில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம்போல் நொருங்கியது. நல்வாய்ப்பாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவிக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. விபத்தினைப் பார்த்த அக்கம் பக்கத்தினரும் சாலையில் சென்றவர்களும் காருக்குள் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

ஹாஸ்பிடல்: அதன் பின்னர்தான், காருக்குள் இருந்தது நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி எனத் தெரியவந்துள்ளது. மேலும் காரை நடிகர் ஜீவா ஓட்டி வந்ததாக தெரிகின்றது. அதன் பின்னர் விபத்துக்குள்ளான காரை, அங்கேயே விட்டுவிட்டு, மாற்றுக் காரில் நடிகர் ஜீவாவும், அவரது மனைவியும் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாக்குவாதம்: கடந்த வாரத்தில் நடிகர் ஜீவா தேனியில் துணி கடை ஒன்றைத் திறந்து வைக்க வந்தபோது, அவரிடம் ஹேமா கமிட்டி தொடர்பான கேள்வி பத்திரிகையாளர் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜீவா, " இப்போது நான் இந்த துணிக்கடையை திறந்து வைக்க வந்துள்ளேன். அனைவரது முகத்திலும் சிரிப்பு உள்ளது. நான் இந்த சூழலை இப்படியே தொடரவேண்டும் என நினைக்கின்றேன் பதில் கூறிவிட்டு, நல்ல விஷயம் பண்ண வந்த இடத்தில் அபசகுணமாக கேள்வி கேட்கின்றீர்கள். அறிவு இருக்கா எனக் கூறினார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் நடிகர் ஜீவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











