Jiiva: ஜீவாவிற்கு ராஷி கண்ணா செய்துக் கொடுத்த பிராமிஸ்.. அப்ப கூடிய சீக்கிரம் வுடு ஜுட்!
சென்னை: பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டிவரும் பா விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அகத்தியா. இந்தப் படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜீவா, ராஷிகண்ணா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பா விஜய், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து படம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.

அகத்தியா படம்: நடிகர்கள் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அகத்தியா படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிரபல பாடலாசிரியர் பா விஜய். பேன்டசி ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடிகர்கள் ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாகவுள்ளது.
அகத்தியா பத்திரிகையாளர் சந்திப்பு: இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜீவா, ராஷிகண்ணா, இயக்குநர் பா விஜய், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ராஷி கண்ணா, தான் முன்னதாக அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 என ஹாரர் படங்களில் நடித்துள்ள நிலையில் அகத்தியா படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்டும் இணைந்துள்ளதாக உற்சாகத்தை பதிவு செய்தார். இந்த புதிய விஷயம் புதிய தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிளைமாக்சில் இது இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜீவா தயக்கம்: இதையடுத்து பேசிய படத்தின் இயக்குநர் பா விஜய், இந்தப் படம் ஜனரஞ்சகமாக ரசிகர்களின் மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையில் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் இந்தப் படத்தில் நடிக்க நடிகர் ஜீவா தயங்கியதாகவும் பின்னர் கதையை கேட்டுவிட்டு அவர் ஓகே சொல்லியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் ஜீவா, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் சமீபத்தில் இதன் காட்சிகளை பார்த்தபோது மிகவும் வியப்படைந்ததாகவும், இயக்குநர் பா விஜய், இந்தப் படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
ராஷி கண்ணா செய்த பிராமிஸ்: தொடர்ந்து பேசிய அவர் தானும் ராஷி கண்ணாவும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளதாகவும் அவர் தனக்கு இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஜீவா மேலும் கூறியுள்ளார். தமிழில் முன்னணி நடிகராக வலம்வந்த ஜீவா, சிறிது காலங்கள் பட வாய்ப்புகள் அதிகமாக அமையாமல் இருந்த நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பிளாக் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து அகத்தியா படத்தின்மீதும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











