Jiiva: நான் இந்த ஜாதி.. எனக்கு அது ரொம்ப முக்கியம்.. செய்தியாளர் சந்திப்பில் தயங்காமல் பேசிய ஜீவா
சென்னை: ராம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. நடிகர் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் உரிமையாளரான ஆ.பி. சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவா. நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். ராம், கற்றது தமிழ், ஈ போன்ற மிகவும் ராவான சப்ஜெக்ட் படங்களில் நடித்து தனது நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் பர்ஃபாமிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அந்தஸ்தை தனது சினிமா வாழ்க்கை தொடங்கும்போதே பெற்றவர். இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த 11ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் பிளாக். படத்தினை பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். இப்படம் ஹோகரன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். படத்தில் தமிழ் ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் பல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் காட்சிகளும் திரையரங்கின் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், படம் பார்த்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கி இருந்தாலும், முதல் வாரத்திலேயே படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமானது. இதனால் படக்குழு வெற்றி விழாவினை சென்னையில் கொண்டாடினர். அப்போது படம் குறித்தும், படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள் குறித்தும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

ஜீவா: அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ஜீவா," பிளாக் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருந்தாலும் இப்போது ரிலீஸ் செய்யப்பட்ட அளவிலான தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும். எங்களது மிகவும் சிறிய பட்ஜெட் படம். எனவே, நாங்கள், அந்த அளவிற்கான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டோம். ரொம்பவும் காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தோம். இதற்கு பின்னர் தீபாவளி ரிலீஸ் படங்கள் வருகின்றது. எனவே இப்போதே ரிலீஸ் செய்துவிடலாம் என ரிலீஸ் செய்துவிட்டோம் எனக் கூறினார்.

இந்த ஜாதி: இந்தப் படத்தின் வெற்றி எனக்கு நிறைய பொறுப்புகளைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து சிறப்பான படங்களைக் கொடுப்பேன். நான் டிஷ்யூம் படத்தில் பேசிய வசனம்தான், ' நானெல்லாம் கைத்தட்டலுக்கு எங்குற ஜாதி' எனவே மக்களின் பாராட்டை பெறக்கூடிய படங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை என பேசினார்.

வசூல்: பிளாக் படம் முதல் வாரத்தை விடவும் இரண்டாவது வாரத்தில் அதிக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 100 காட்சிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் நாடு முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தமிழ் நாடு முழுவதுமே படத்தின் காட்சிகளும் திரையரங்குகளின் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.



Click it and Unblock the Notifications











