கபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா!

By

சென்னை: '83' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ள நடிகர் ஜீவாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுக விழா, சென்னையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து, '83' என்ற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

கபீர் கான் இயக்கும் இதில், அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கபில் மனைவி ரோமியாக தீபிகா படுகோன், மதன்லாலாக ஹார்டி சாந்து, சுனில் கவாஸ்கராக தாஹிர் ராஜ் பாசின் நடிக்கின்றனர்.

ஜீவா

ஜீவா

அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா (Amiya) உதவி இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

6 நிறுவனம்

6 நிறுவனம்

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், பான்டோம் பிலிம்ஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், உட்பட 6 நிறுவனங்கள் இணைந்து இந்தப் பிரமாண்டப் படத்தைத் தயாரிக்கின்றன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

ஸ்பெஷல் டீசர்

ஸ்பெஷல் டீசர்

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கபில்தேவின் பிறந்த நாளான ஜனவரி 6 ஆம் தேதி, ஸ்பெஷல் டீசர் வெளியிடப்பட இருக்கிறது.

ஜீவாவின் லுக்

ஜீவாவின் லுக்

இதையடுத்து நடிகர் ஜீவாவின் லுக் இடம்பெற்றுள்ள போஸ்டர், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்படும் இந்த விழாவில், கபில்தேவ், ரன்வீர் சிங் உட்பட படக் குழுவினர் கலந்துகொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X