ஜித்தன் ரமேஷுக்கு பர்த்டே.. அகம் டிவி வழியே வாழ்த்து சொன்ன ஜீவா.. லொள்ளு சபா மனோகர் வேற லெவல்!
சென்னை: நடிகர் ஜித்தன் ரமேஷுக்கு இன்று பிறந்தநாள். பிக் பாஸ் வீட்டில் சூப்பராக கொண்டாடப்பட்ட பர்த்டே காட்சிகள் அன் சீன் புரமோவில் வெளியாகி உள்ளது.
Recommended Video
ஜித்தன் ரமேஷின் தம்பியும் நடிகருமான ஜீவா, பிக் பாஸ் டிவியில் தோன்றி ரமேஷுக்கு சர்ப்ரைசாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
ஸ்பெஷல் கேக்கை பிக் பாஸ் பரிசளிக்க பிக் பாஸ் வீடே போட்டி களமாக இல்லாமல் ஆனந்த வீடாக மாறியது.

ஹேப்பி பர்த்டே ஜித்தன் ரமேஷ்
1982ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்த ஜித்தன் ரமேஷுக்கு இன்று 38வது பிறந்த நாள். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் அவர் இருப்பதால், பிக் பாஸ் குடும்பத்தோடு தனது பிறந்தநாளை நேற்று இரவு கொண்டாடி உள்ளார். விஜய் மியூசிக் அன்சீன் புரமோவில் இப்போ அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

வாழ்த்து சொன்ன தம்பி
அண்ணன் ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகும் போதே, வீடியோ காலில் பேசி தனது வாழ்த்துக்களை சொல்லி இருந்தார். இந்நிலையில், ஜித்தன் ரமேஷின் பிறந்தநாளை முன்னிட்டும் நடிகர் ஜீவா, அகம் டிவி வழியே தோன்றி அண்ணனுக்கு அழகா ஹேப்பி பர்த்டே சொல்லி சந்தோஷப்படுத்தி உள்ளார்.

லொள்ளு சபா மனோகர்
நடிகர் ஜீவா தனது அடுத்த பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் என தெரிகிறது. படக்குழுவுடன் ரமேஷுக்கு பர்த்டே வாழ்த்துக்களை கூறியுள்ளார். ஜீவா உடன் விடிவி கணேஷ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் இருந்தனர். லொள்ளு சபா மனோகர், ஹேப்பி பர்த்டே ரமேஷ், வி மிஸ் யூ என அவரது ஸ்டைலில் செம பக்கவாக வாழ்த்தினார்.

பாலாஜி பாராட்டு
ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷுக்கு முத்தம் கொடுத்து ஹேப்பி பர்த்டே புரோ என வாழ்த்தினார். சுரேஷ் தாத்தாவுக்கு ரமேஷ் பிக் பாஸ் கொடுத்த கேக்கை வெட்டி ஊட்டினார். நிஷா முதல் ஹவுஸ்மேட் அனைவரும் குஷியில் கொண்டாடினார்கள். ரமேஷை கட்டிப் பிடித்துக் கொண்டு, Most Positive Person ரமேஷ் என பாலாஜி பாராட்டித் தள்ளினார்.

ரசிகர்கள் வாழ்த்துகள்
நடிகர் ஜித்தன் ரமேஷ், மனசுல பட்டதை பளிச்சென சொல்லி நேற்று பாலாஜியை நோஸ் கட் பண்ணியிருந்தார். ஆனாலும், பாலாஜியின் பாசம் அவர் சொன்னது போலவே உண்மையாகவே இன்றும் தொடர்வதை பார்க்க முடிகிறது. ஜித்தன் ரமேஷின் பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் ரசிகர்கள் ஜித்தன் ரமேஷுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications