செம ஜெனியூன் டான்ஸ்.. ஹேட்ஸ் ஆஃப் ஜித்தன் ரமேஷ்.. ரேகாவையும் சும்மா சொல்லக்கூடாது!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஜித்தன் பட பாடலுக்கு ராமேஷும் நடிகை ரேகாவும் போட்ட ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
போட்டியாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கான காஸ்ட்யூம்களை அனுப்பி வரும் பிக்பாஸ், அவர்களுக்கு பாடலை திடீரென ஒளிபரப்பி ஆடவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்.

ஜித்தன் ரமேஷ் - ரேகா
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நடிகை ரேகாவை கோர்த்து விட்ட பிக்பாஸ், ரமேஷின் முதல் படமான ஜித்தன் படத்தில் இடம் பெற்ற அ முதல் ஃ வரை பாடலை ஒளிப்பரப்பி ஆட விட்டார்.

டச் பண்ணாமல்
ஐட்டம் பாடல் என்றாலும் இருவரும் அவ்வளவு டீசன்ட்டாக ஆடினர். குறிப்பாக ஜித்தன் ரமேஷ் ரேகாவை தொடவே இல்லை. ஒருவரை ஒருவர் டச் பண்ணாமல் அவ்வளவு நேர்த்தியாக ஆடினர்.

க்யூட் பர்ஃபாமன்ஸ்
ரேகாவும் வயதானதே தெரியவில்லை. ஜீன்ஸ் பேண்ட் பளபள டாப்ஸில் செம அசத்தலாக இருந்தார் ரேகா. பார்க்கவே அவ்வளவு க்யூட்டாக இருந்தது இருவரின் டான்ஸும்.

ஜெனியூன் பர்ஃபாமன்ஸ்
குறிப்பாக ஒருவரை ஒருவர் தொடாமல் ஆடியதை நெட்டிசன்களும் பாராட்டியுள்ளனர். வேல் முருகன், ரியோ உள்ளிட்டோருடன் கம்பேர் பண்ணும் போது நீங்க ரொம்பவே ஜெனியூன் ரமேஷ் என பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











