நைட்ல வொய்ஃப்கிட்ட கதறியிருக்கிறேன்.. ஃபேம்ல இருந்தாதான் மதிப்பாங்க.. சிந்திக்க வைத்த ஜித்தன் ரமேஷ்!

சென்னை: நடிகர் ஜித்தன் ரமேஷ் சினிமாத்துறையில் ஃபேம் இருந்தால் மட்டுமே மதிப்பார்கள் என உருக்கமாக கூறியுள்ளார்.

Recommended Video

யார் captain?தலையில் அடித்து கொண்ட Sanam Shetty | Promo 1

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஜித்தன் ரமேஷ் பங்கேற்றுள்ளார். தற்போது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் கடந்து வந்தப் பாதை டாஸ்க் கொடுத்துள்ளார்.

இதில் கடந்த இரண்டு நாட்களாய் போட்டியாளர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

சில்வர் ஸ்பூன் இல்லை

சில்வர் ஸ்பூன் இல்லை

நேற்று நடிகர் ஜித்தன் ரமேஷ் தன்னுடைய அனுவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, தான் ஒன்றும் பிறக்கும் போதே சில்வர் ஸ்பூனுடன் பிறக்கவில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்தான்.

நிலைமை மோசமாகிவிட்டது

நிலைமை மோசமாகிவிட்டது

முதல் படம் செம ஹிட்டானது. அதனால் ஜித்தன் ரமேஷ் என்ற பெயர் இருந்தது. அடுத்தடுத்த படங்கள் சரியாக போகவில்லை. இதனால் ஜித்தன் ரமேஷ் என்பது அப்படியே ஃபேட் ஆகிவிட்டது. வெறும் ரமேஷ் என்றார்கள், பின்னர் சவுத்ரி சார் பையன், ஜீவாவோட அண்ணனா, தம்பியா என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டேன்.

ஃபேம் இருந்தால்தான்

ஃபேம் இருந்தால்தான்

என்னை சந்திப்பவர்கள் கூட என்னைப் பற்றி விசாரிக்காமல் என் அப்பாவை பற்றியும் ஜீவாவையும்தான் விசாரிப்பார்கள். அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. பிரஸ் மீட் என்றால் கூட யாரும் வரமாட்டார்கள், அப்போதுதான் புரிந்தது ஃபேம் இருந்ததால்தான் மதிப்பார்கள் என்று.

மனைவியிடம் கதறியிருக்கிறேன்

மனைவியிடம் கதறியிருக்கிறேன்

சேர் போட மாட்டார்கள்.. பொக்கே கொடுக்க மாட்டார்கள்.. கொடுத்த பொக்கேவை கூட கையில் இருந்து பிடுங்கி மற்ற ஆர்ட்டிஸ்டுக்கு கொடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். இரவில் என் மனைவியிடம் சொல்லி கதறி அழுதுருக்கேன்.

மாடியில் இருந்து விழுந்துவிட்டால்

மாடியில் இருந்து விழுந்துவிட்டால்

என்னை மட்டும்தான் கடவுள் சோதித்தான் என்றால் என் குடும்பத்தையும் சோதித்தான். என் மகள்தான் எனக்கு உயிர். ஒரு நாள் அவள் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக போன் வந்தது. அடித்து பிடித்து ஹாபிட்டலுக்கு போய் பார்த்தேன், கண்கள் வீங்கி காதில் இருந்து ரத்தம், மூக்கில் இருந்து ரத்தம் உயிரே போயிவிட்டது. 2 நாட்கள் ஐசியுவில் இருந்தார்.

எதுவும் பண்ண முடியல

எதுவும் பண்ண முடியல

இரண்டு நாட்கள் வரை டாக்டர்களும் எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகுதான் அவர் கண் விழித்தார். எந்த பிரச்சனையும் இல்லை என்றார்கள் டாக்டர்கள். அப்போதுதான் உயிரே வந்தது. வாழ்க்கையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்தேன். நல்லா டான்ஸ் பண்றேன், ஃபைட் பண்றேன், ஆனா இன்னும் எதுவும் பண்ண முடியல.

கை கொடுக்கவில்லை

கை கொடுக்கவில்லை

15 வருடங்களுக்கு முன்பே இந்த மேடையை பார்த்தேன். ஆனால் ஒழுங்காய் பயன்படுத்திக் கொள்ளவில்லை. திரும்பவும் பிக்பாஸ் மூலம் இப்படி ஒரு மேடை கிடைத்துள்ளது. இதை ஒழுங்காய் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசினார். நடிகர் ஜித்தன் ரமேஷ், தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகன் ஆவார். ஜித்தன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அவருக்கு அதன் பிறகு நடித்த படங்கள் எதுவும் கைக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X