விஜயகாந்த் மாதிரி விஜய் செய்தாரா?.. கண்டிப்பாக பின்னடைவுதான்.. விஜய்யின் நண்பர் ஓபனா சொல்லிட்டாரே

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். பரபரப்பாக அரசியல் களத்தில் இயங்கிவரும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. விஜய்யோ அதைப் பற்றி பெரிதாக ரியாக்ட் செய்யாமல் தன்னுடைய பாதையில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். இந்தச் சூழலில் நடிகரும், விஜய்யுடன் நெருங்கி பழகியவருமான ஜோ மல்லூரி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வருவார் என்றே கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அதன்படி அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். ஒருபக்கம் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான மீட்டின் கலை மற்றும் அரசியலில் பம்பரமாக சுழன்றுவருகிறார். அதேசமயம் ஜன நாயகன் திரைப்படம்தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மட்டுமே இருக்கப்போகிறார் விஜய்.

விமர்சனங்கள்: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் பலமாகவே வைக்கப்படுகின்றன. முக்கியமாக அவருக்கு அரசியல் அறிவே இல்லை; மேடையில் ஏதேதோ பேசுக்கொண்டிருக்கிறார்; Work From Home அரசியல் செ ய்கிறார் என்று ஏகப்பட்ட தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன. அவரும் தன்னால் முடிந்த அளவு பதிலடியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஜோ மல்லூரி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார்.

Actor Joe Malloori Slams Vijay And His Political Entry

ஜோ மல்லூரியின் பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒரு தலைவன் உருவாகிறான் என்றால் அது சினிமா நடிகனாக இருக்கக்கூடாது என்று நான் கூறியது இப்போது இல்லை. விஜயகாந்த் அரசியலில் இருந்த காலத்திலிருந்தே இதனைத்தான் நான் பேசிவருகிறேன். நான் எனது கருத்திலிருந்து பின்வாங்கமாட்டேன். இந்தக் கருத்து பொதுமைக்கான கருத்து. விஜய்க்கு பின்னால் யாரும் போகாதீர்கள் என்று நான் எந்த இடத்திலுமே சொல்லவே இல்லையே. கல்வியாளர்களுக்கு பின் இந்தச் சமூகம் இருக்க வேண்டும்.

விஜய்க்கு எதிரானவனா?: நான் ஒன்றும் விஜய்க்கு எதிரானவன் இல்லை. விஜய் என் நண்பர்தான். நான் சொன்ன கருத்தை யாரும் முழுமையாக பார்க்கவில்லை. அவர் என்னிடம் அரசியல் குறித்து நிறையவே பகிர்ந்திருக்கிறார். அவர் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உடையவர். என்னை பேச வைத்து அவர் நிறைய கேட்பார். நான் சொல்லவரும் கருத்து அவருக்கு எதிரானது இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வார். நான் சொன்னதன் காரணமே, நடிப்பு என்பதும் அரசியல் என்பதும் வேறு வேறு என்பதால்தான். இரண்டு படங்களில் விஜய்யுடன் பழகியிருக்கிறேன். அப்போது அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டிருக்கிறேன். நிறைய அரசியல் கருத்துக்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

Actor Joe Malloori Slams Vijay And His Political Entry

நடிகர் இல்லை: இப்போது அவர் நடிகராக இல்லை. தலைவராக மாறிய பிறகு மிகப்பெரிய கல்வியாளராக அவரது சிந்தனையை மடை மாற்றக்கூடும். எம்ஜிஆரும், விஜயகாந்த்தும் பொதுநலன் சார்ந்த கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி பங்களிப்பை செய்த பிறகுதான் அரசியலுக்குள் வந்தார்கள். ஆனால் விஜய் அப்படி செய்தாரா என்பது பெரிய கேள்விக்குறி. ஆனால் அவர் இன்னும் தனது ஸ்திரத்தன்மையை பெரிதாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் என்னை போன்ற அவரது நண்பர்களின் கருத்து. அவர் இன்னும் தனது பிம்பத்தை வலுவாக்கிவிட்டு வந்திருக்க வேண்டும். சில பிரச்னைகளை அவர் மேடையில் பேச மறுப்பது கண்டிப்பாக அவருக்கு பின்னடைவுதான். ஒரு சிலரின் ஆலோசனைகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் தலைவராகிவிட முடியாது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X