பொண்டாட்டி டிரெஸ புருஷனும்.. புருஷன் டிரெஸ பொண்டாட்டியும்.. இது என்னடா குவாரண்டைனுக்கு வந்த சோதனை!
சென்னை: ஊரடங்கு காலத்தில் பிரபல நடிகரும் அவரது மனைவியும் பிலிப் சேலஞ்சுக்காக போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கேன். பாகுபலி படத்திலும் நடித்திருக்கிறார் ஜான் கோக்கேன்.
இவர் 2012ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவனை திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.

திருமணம்
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு தனது மனைவியான மீரா வாசு தேவனை விவாகரத்து செய்தார் ஜான் கோக்கேன். இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றினார்.

படங்களில்..
மாடலான இவர் படங்களிலும் நடித்துள்ளார். நண்பன். பீட்சா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் பூஜா. இந்நிலையில் அண்மையில் இருவரும் மாலத்தீவில் தங்களின் விடுமுறை கழித்தனர்.

ஆடையை மாற்றி
அப்போது இருவரும் உள்ளாடையுடன் ஆட்டம் போட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இருவரும் பிலிப் சேலஞ்சுக்காக ஒருவர் ஆடையை ஒருவர் மாற்றி மாற்றி போட்டு நடனமாடியிருக்கின்றனர்.
கொடுமை
முதலில் பூஜா ராமச்சந்திரன் ஸ்ட்ராப்லெஸ் உடையில் டான்ஸ் ஆட பின்னர் அதே உடையில் நடிகர் ஜான் கோக்கெனும் நடனமாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா குவாரண்டைன் காலத்துக்கு வந்த சோதனை என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











