மனைவியுடன் மாலத்தீவில் ஜாலி பண்ணும் பிரபல பாகுபலி நடிகர்.. அரைகுறை ஆடையில் தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பிரபல நடிகர் தனது மனைவியுடன் மாலத்தீவில் ஓய்வை கழிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கேன். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ஜான்.
பாகுபலி படத்திலும் நடித்திருக்கிறார் ஜான் கோக்கேன். இதனால் பெரும் பிரபலமானார்.

இரண்டாவது திருமணம்
இவர் 2012ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவனை திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார், இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு தனது மனைவியான மீரா வாசு தேவனை விவாகரத்து செய்தார் ஜான் கோக்கேன். இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

பல படங்கள்
பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றினார். மாடலான இவர் படங்களிலும் நடித்துள்ளார். நண்பன். பீட்சா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றம் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் பூஜா.

விவாகரத்து
இவர் எஸ்எஸ் மியூஸிக் சேனலில் உடன் பணியாற்றிய கிரேக்கை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஜான் கோக்கேனை திருமணம் செய்து கொண்டார்.
அரைகுறை ஆடை
இந்நிலையில் இருவரும் மாலத் தீவில் தங்களின் ஓய்வை கழித்து வருகின்றனர். இதில் நடிகை பூஜா பிகினியுடனும் நடிகர் ஜான் நிக்கருடனும் கடலில் ஆட்டம் போட்டுள்ளனர். பின்னர் தண்ணீர் சொட்ட சொட்ட மணலில் விளையாடியுள்ளனர். பின்னர் அப்படியே போட்டோ எடுத்துள்ளனர்.

இதுதான் தேவை
இந்த போட்டோவை நடிகர் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் எனக்கு தேவையானது எல்லாம், மனைவியிடம் இருந்து அதிகப்படியான அன்பும் விட்டமின் சி என கடலை குறிப்பிட்டும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











