இதுலேயும் கபிலனுடன் போட்டி போடும் வேம்புலி.. என்ன செஞ்சுருக்கார் பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜான் கோக்கென் ஆர்யாவுடன் போட்டி போட்டு செய்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

பாகுபலி தி பிகினிங், கேஜிஎஃப் சாப்டர் மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் அஜித்தின் வீரம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார் ஜான் கோக்கென்.

சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்திலும் நடித்திருந்தார் நடிகர் ஜான் கோக்கென். இதில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் வீச்சருவாள் மீசையுடனும் முறுக்கேறிய உடம்புடன் மிரட்டலாக நடித்திருந்தார் நடிகர் ஜான் கோக்கென்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்

பல காட்சிகளில் பார்வையிலேயே மிரட்டியிருந்தார். எதிராளியை அடிக்கும் காட்சியிலும் சரி அடிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையாளர்களையே மிரட்டி அப்ளாஸை அள்ளியிருந்தார் வேம்புலி. சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார் வேம்புலி.

தீயாய் பரவும் போட்டோ ஷூட்

தீயாய் பரவும் போட்டோ ஷூட்

தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கான போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார் ஜான் கோக்கென். மாடர்ன் டிரெஸிலும் பேர் பாடியில் கட்டுடலை காட்டியும் கலக்கலாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தற்போது அவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பாக்ஸிங் வாத்தியார் துரை கண்ணு

பாக்ஸிங் வாத்தியார் துரை கண்ணு

அதாவது சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலிக்கு பாக்ஸிங் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக துரைக்கண்ணு வாத்தியார் கதாப்பாத்திரத்தில் ஜிஎம் சுந்தர் நடித்திருந்தார். கபிலன் கதாப்பாத்திரத்தில் ஆர்யாவும் அவருக்கு பாக்ஸிங் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக ரங்கன் வாத்தியார் கதாப்பாத்திரத்தில் பசுபதியும் நடித்திருந்தனர்.

வைரலான சைக்கிள் மீம்ஸ்

வைரலான சைக்கிள் மீம்ஸ்

சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி பெரும் பிரபலமானது. அந்தக் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. இந்த மீம்ஸ்களால் தனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நடிகர் பசுபதி டிவிட்டியிருந்தார்.

துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி

துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி

இந்நிலையில் கபிலன் ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் கூட்டிச் சென்றது போல் வேம்புலி தனது துரைக்கண்ணு வாத்தியாரை சைக்கிளில் கூட்டி செல்லும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. துரைக்கண்ணு வாத்தியாரை வேம்புலி சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து செல்வது போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ஜான் கோக்கென்.

வேம்புலி சைக்கிள் ஓட்ட

வேம்புலி சைக்கிள் ஓட்ட

வேம்புலியும் துரைக்கண்ணு வாத்தியாரும் சைக்கிளில் செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேம்புலி சைக்கிள் ஓட்ட துரைக்கண்ணு வாத்தியார் பின்னால் அமர்ந்துள்ளார்.
இருவரும் சைக்கிளில் சென்றப்படியே கபிலன் மற்றும் ரங்கன் வாத்தியார் போல் பேசிக் கொண்டே செல்கின்றனர்.

நாமளும் ஊர சுத்தி வரலாம்!

நாமளும் ஊர சுத்தி வரலாம்!

இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஜான் கோக்கென், வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்!!! என அந்த போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம என்றும் ஆர்யா, பசுபதியிடம் இன்னொரு ரெய்டு போலாமா என்று கேட்டு வருவது போலவும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அங்க பாருங்க ஆளே மாறிட்டாங்க..

அங்க பாருங்க ஆளே மாறிட்டாங்க..

ஜான் கோக்கென் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், வாத்தியாரே அங்க பாருங்க அந்த வேம்புலியும் துரைகண்ணு வாத்தியாரும் ஆளே மாறிட்டாங்க.. என கபிலன் ரங்கன் வாத்தியாரிடம் கூறுவதாக பதிவிட்டுள்ளார்.

சைக்கிள் விட்டு ஏத்தி முடிச்சிடலாம்

சைக்கிள் விட்டு ஏத்தி முடிச்சிடலாம்

மற்றொரு நெட்டிசனான இவர், வாத்தியாரே ரிங்கு எதுக்கு இவங்கள இங்கேயே சைக்கிள் விட்டு ஏத்தி முடிச்சிடலாம் என எதிரே சைக்கிளில் வரும் பசுபதியையும் ஆர்யாவையும் பார்த்து வேம்புலி துரைக்கண்ணு வாத்தியாரிடம் கூறுவதாக கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

வேற லெவல் - செம வைரல்

வேற லெவல் - செம வைரல்

மற்றொரு நெட்டிசனான இவர் நீங்களும் உங்கள் குருவும் சார்பட்டா பரம்பரை படத்தில் சிறப்பாக செய்தீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் பல நெட்டிசன்கள் வேற லெவல் என்றும் செம வைரல் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X