வெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக மிரட்டிய நடிகர் ஜான் கோக்கேன் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கேன். கேஜிஎஃப் சாப்டர் 1, வீரம், டியான், பாகுபலி தி பிகினிங், லக்ஷ்மணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கேரக்டரில் நடித்திருந்தார் ஜான் கோக்கேன்.

பக்கா பாக்ஸர்
வேம்புலியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதாக தனது கதாப்பாத்திரத்தில் மிரட்டியுள்ளார் ஜான் கோக்கேன். நடை, உடை, பாவனை என அனைத்தும் பக்கா பாக்ஸராக பிரதிபலித்தது.

அடி வாங்கும் காட்சிகளிலும்
அடிக்கும் காட்சிகளிலும் சரி அடி வாங்கும் காட்சிகளிலும் சரி கொஞ்சமும் தனது நடிப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை ஜான் கோக்கேன். அதற்கான பலனும் அவருக்கு கிடைத்துள்ளது.

மனைவியுடன் ரொமான்ஸ்
அவரை பாராட்டி தள்ளுகின்றனர் ரசிகர்கள். வெற்றி களிப்பில் உள்ள நடிகர் ஜான் கோக்கேன், தற்போது ஓய்வில் உள்ளார். தனது மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் ரொமான்ஸ் செய்து வருகிறார் ஜான் கோக்கேன்.

மனைவியுடன் பஸ்ஸில்
ஜான் கோக்கேன் தனது மனைவிடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜான் கோக்கேன் தனது மனைவியுடன் பேருந்தில் ட்ராவல் செய்கிறார்.

நெருக்கமாக செல்பி
இந்த போட்டோவில் ஜான் கோக்கேனும் பூஜாவும் ஒருவரை ஒருவர் அணைத்தப்படி உள்ளனர். இந்த போட்டோவில் மனைவியுடன் சினிமாவுக்கு சென்றுள்ளார் ஜான் கோக்கேன். அங்கு இருவரும் நெருக்கமாக செல்பி எடுத்துள்ளனர்.

தலையில் முத்தம்
இந்த போட்டோவில் தனது மனைவியுடன் பீச்சில் நெருக்கமாக செல்பி எடுத்துள்ளார் ஜான் கோக்கேன். இந்த போட்டோவில் சட்டை போடாமல் உள்ள தனது கணவருக்கு தலையில் முத்தம் கொடுக்கிறார் பூஜா ராமச்ந்திரன்.


Click it and Unblock the Notifications











