John Kokken: ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர்.. ஜான் கொக்கன் பாராட்டு!

சென்னை: நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் தனுஷ் இணைந்துள்ளார்.

தற்போது கேப்டன் மில்லர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Actor John Kokken says Captain miller movie is in range of Hollywood movies

கேப்டன் மில்லர் படம் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக ஜான் கொக்கன் பாராட்டு: தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ராக்கி, சாணிக்காயிதம் படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28ம் தேதி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். தீபாவளி ரிலீசுக்கு முன்னதாக படம் தயாராகிவந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது டிசம்பருக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தில் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களும் நடித்துள்ள நிலையில், படம் குறித்து ஜான் கொக்கன் தனது சமீபத்திய பேட்டியில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கேப்டன் மில்லர் தமிழ் படமாக இல்லாமல் பெரிய அளவிலான இந்தியப் படமாக உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தின் மேக்கிங் அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Actor John Kokken says Captain miller movie is in range of Hollywood movies

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள ஜான் கொக்கன், படத்தில் தனுஷின் லுக் உள்ளிட்டவை வேற லெவலில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் பெரிய அளவில், மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளதாகவும் ரசிகர்களை அதிகமாக கவரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். படத்தில் பெரிய சம்பவம் இருப்பதாகவும் ஜான் கொக்கன் தெரிவித்துள்ளார்.

வரும் 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது. இந்நிலையில் டீசரும் மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக படத்தில் நடித்துள்ள ஜான் கொக்கன் கூறியுள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X