ராணுவ வீரர்கள் நாட்டை காப்பது போல.. வீட்டிலிருந்து நாட்டை காப்போம்.. ஜான் விஜய்
சென்னை : நடிகர் ஜான் விஜய் கொரோனா தொற்றுக்கு எதிரான தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அரசாங்கம் சரியான முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில் நாம் வீட்டில் இருப்பது தான் சரி என்று நடிகர் ஜான் விஜய் கூறியுள்ளார்.

பல பிரபலங்களும் தாங்கள் வீட்டில் இருந்த படியே தங்களின் முழு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகின்றனர். இப்படியிருக்க சமூக வலைதளங்களின் வாயிலாக தாங்கள் இருப்பதை போல நீங்களும் வீட்டிலே இருங்கள் இந்த நேரத்தில் இதுதான் பாதுகாப்பு இதை நம் அரசு நம்மிடம் கேட்டுகொண்டுள்ளது என்று கூறி வருகின்றனர்.
இதே போல் நடிகர் ஜான் விஜய் தனது ஸ்டைலில் மக்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். இதில் தன் மகனுடன் காணொளியில் பேசும் ஜான் விஜய், நமது நாட்டின் இராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாப்பது போல் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது இதனால் இதை அனைவரும் பயன்படுத்தி வீட்டிலேயே இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் நான் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறேன் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். அதேபோல நீங்களும் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் அம்மா அப்பாவுடன் விளையாடுங்கள். உங்கள் குழந்தை பருவம் உங்கள் நினைவுக்கு வரும் என்று கூறியிருக்கிறார்.
இது நமக்கு நல்ல அனுபவத்தை தரும் இதனால் உங்கள் நேரத்தை குடும்பத்துடன் செலவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதே நேரத்தில் பாதுகாப்புடன் இருங்கள் சுத்தமாக இருங்கள் இந்த மோசமான வைரஸிடம் இருந்து உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் என்று கூறி அன்புடன் ஜான் விஜய் என்று காணொளியை முடித்துள்ளார்.

அரசு இந்த 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்ததற்கு முக்கிய காரணம் அவரவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் நோய் தொற்றும் அண்டாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டால் இந்த 21நாட்களுக்கு பிறகு இந்த நோயின் தாக்கம் இருக்கவே இருக்காது இந்தியா மாதிரியான மக்கள் நெருங்கி வாழும் இடங்களில் இந்த நோய் எதிர்பாராததை விட வேகமாக பரவும் இதற்குதான் இந்த ஊரடங்கு என்று வலியுறுத்தி ஜான் விஜய் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











