போன் போட்டு சரக்கு கேட்பார்.. சிம்பு மானத்தை வாங்கிய நடிகர் ஜான் விஜய்!
சென்னை: நடிகர் ஜான் விஜய் சிம்பு குறித்த ரகசியத்தை சொல்லி நெளிய வைத்துள்ளார்.
மவுன குரு, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் நடிகர் ஜான் விஜய். கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு நண்பராக நடித்திருப்பார்.
இதேபோல் நேரம் உள்ளிட்ட சில படங்களிலும் தனது பாத்திரத்தை பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான பூமி திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் கேரக்டரில் நடித்து வரவேற்பை பெற்றார்.

தைரியமாக தகவல்கள்
தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள ஜான் விஜய் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள ஜான் விஜய், பல நடிகர்கள் குறித்து தைரியமாக பல தகவல்களை கூறியுள்ளார். அதன்படி சிம்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜான் விஜய் அவரது மானத்தையே வாங்கிவிட்டார்.

சரக்கு கிடைக்குமா
அதாவது தான் ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு பார்ட்டிக்காக பல விதமான சரக்குகள் வரும். அப்போது சிம்பு தனக்கு போன் செய்து, ஏதாவது ஃபாரின் சரக்கு ஏதாவது கிடைக்குமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாமா என் கேட்டதாக கூறியுள்ளார்.

எல்லாத்தைத் சொல்லிடுவேன்
மேலும் தான் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்பும் நபர். என்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் எதையும் ஒளிவு மறைவின்றி சொல்லி விடுவேன் என கூறியுள்ளார்.

ஓபனாக பேசிய ஜான் விஜய்
ஜான் விஜய் இப்படி ஓபனாக பேசியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது, வெங்கட் பிரபுவின் மாநாடு மற்றும் பத்துத்தல ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











