புரொடக்சன் நம்பர் 18 : தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் இணைந்த ஜோஜு ஜார்ஜ்

Recommended Video

Asuran - 'ஆமா வடசென்னை படத்துக்கு NATIONAL AWARD வரலன்னு வருத்தமா இருக்கு'!-

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புரொடக்சன் நம்பர் 18 என்ற கேங்ஸ்டர் பற்றிய திரில்லர் படத்தில் தற்போது புதிதாக தேசிய விருது பெற்ற மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகர் தனுஷ் உடன் ஜோடியாக மலையாள திரைப்படமான மாயநதி திரைப்படம் மூலம் மக்களிடையே கவனிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

நடிகர் தனுஷ் நடித்து வரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று தற்காலிகமாக புரொடக்சன் நம்பர் 18 என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கேங்ஸ்டர் த்ரில்லராக வரவிருக்கிறது.

Actor Joju George Joins with Dhanush and Karthik Subburaj’s Movie Team

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்குகிறார். 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து நடிகர் தனுஷுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு இருக்கிறது.

ஒய்நாட் ஸ்டுடியோஸ் கீழ் இப்படத்தை சஷிகாந்த் தயாரிக்கிறார். நடிகர் தனுஷ் உடன் ஜோடியாக மலையாள திரைப்படமான மாயநதி திரைப்படம் மூலம் மக்களிடையே கவனிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், சூப்பர் டீலக்ஸ் புகழ் அஸ்வந்த் அசோக்குமார், கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

மேலும், தேசிய விருது பெற்ற நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் லண்டனில் படக்குழுவினருடன் இணைந்துள்ளார்.

ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் நடிகராக மட்டுமன்றி சில படங்களில் இணை தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஜோசப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் வென்றுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படம் அமைந்துள்ளது.

புரொடக்சன் நம்பர் 18 திரைப்படத்தில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றுகிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு துறையை கையாள்கிறார். திரைப்படத்தின் ஆக்ஷன் துறையை அன்பரிவ் சகோதரர்கள் கையாள்கின்றனர். அன்பரிவ் சகோதரர்களுக்கு கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த ஸ்டண்ட் அமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X