லாக்டவுனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் இல்லை.. ரசிகர்கள் அப்செட்.. பிரபல ஹீரோ ஆறுதல் லெட்டர்!

By

ஐதராபாத்: பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இயலவில்லை என்று அறிவித்ததால், ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார், பிரபல ஹீரோ.

Recommended Video

Baahubali completed 3 years | Prabhas | Rana Duggubati | Rajamouli

மெகா ஹிட்டான 'பாகுபலி' படத்தை அடுத்து, இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி.

லாக்டவுன்

லாக்டவுன்

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் உட்பட பலர் இதில் நடித்து வருகிறார்கள். டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தனய்யா, சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இதைத் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இதில் நடித்து வரும் பிரபல ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு நாளை (மே 20) பிறந்தநாள். அன்று, ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டரை கொண்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுபற்றி சமூக வலைத்தளங்களில் அவர்கள் பரபரப்பாகக் கூறி வந்தனர். இது பற்றி மீடியாவும் எழுதி வந்தது.

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்நிலையில், அது சாத்தியமில்லை என்று அறிவித்துள்ளது, ஆர்.ஆர்.ஆர் படக்குழு. 'லாக்டவுன் நீடிக்கப்பட்டிருப்பதால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் முயற்சி எடுத்தும் டீசரையும் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் பிறந்த நாளன்று வெளியிட முடியவில்லை. கடமையே என்று எதையோ உருவாக்கி வெளியிட விரும்பவில்லை.

திருவிழா

திருவிழா

அதனால், உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறோம். அவரது லுக் வெளியாகும் போது கொண்டாட்டமாக இருக்கும்' என்று படக்குழு கூறியிருந்தது. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர், தனது ரசிகர்களுக்காக ஒரு கடிதம் எழுதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மதிப்புமிக்க பரிசு

மதிப்புமிக்க பரிசு

அதில், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையையும் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நீங்கள் காட்டும் அன்பால் பெருமகிழ்ச்சி அடைவேன். இந்த வருடம், எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய மதிப்புமிக்க பரிசு, வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். எனது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகாது என்பதால் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது தெரியும்.

சந்தேகம் இல்லை

சந்தேகம் இல்லை

உங்களைப் போலவே படக்குழுவும் அப்படி ஏமாற்றம் அடைந்திருக்கிறது. அவர்கள் சிறப்பான படத்தை கொண்டுவர கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜமவுலியின் இந்தப் படம் பெருமை மிகுந்த படமாக இருக்கும். உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X