Junior Balaiah Passed Away - காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. ஜூனியர் பாலையா உயிரிழந்தார்

சென்னை: Junior Balaiah Passed Away (ஜூனியர் பாலையா உயிரிழப்பு) மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. தனது தந்தை போலவே உருவ அமைப்பு கொண்ட அவர் 1975ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாலையா எப்படி தனது தனித்துவமான உடல்மொழி, குரல் மொழி ஆகியவற்றை கொண்டிருந்தாரோ அதேபோல் ஜூனியர் பாலையாவும் கொண்டிருந்தார்.

Actor Junior Balaiah Passed Away

படங்கள்: மேல்நாட்டு மருமகளை தொடர்ந்து எமனுக்கு எமன், தூரம் அதிகமில்லை, அன்பே ஓடி வா, கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சின்ன தாயி, அம்மா வந்தாச்சு, ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், அமராவதி, பவித், வீட்ல விசேஷங்க, அவதாரம், புது நிலவு, வேட்டிய மடிச்சு கட்டு, பாரதி, ஜூலி கணபதி, ஜெயம், வின்னர், சாட்டை, கும்கி, தனி ஒருவன் என பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியானது.

கரகாட்டக்காரன்: ஜூனியர் பாலையா நடித்த படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதிலும் கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியில் ஜூனியர் பாலையா சொல்லும், 'அண்ணே என்னதான் இருந்தாலும் அவன் நம்ம செட்டு' என்ற வசனமும், செந்திலிடம் வாழைப்பழம் குறித்து விசாரிப்பதற்கு முன்பு அவர் செய்த உடல்மொழியும் பலரையும் கவர்ந்தது.

@சாட்டை: அதேபோல் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் கடந்த ஆம் ஆண்டு வெளியான சாட்டை திரைப்படம் பல காலத்துக்கு பிறகு ஜூனியர் பாலையாவை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தலைமை ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்த அவர் தம்பி ராமையாவின் அராஜகத்தை பொறுத்துக்கொண்டும் ஒருகட்டத்தில் அவரையே மிரட்டும் சீனிலும் தனது நடிப்பால் அப்ளாஸை அள்ளியிருந்தார்.

உயிரிழப்பு: என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்துக்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த அவர் வளசரவாக்கத்தில் வசித்துவந்தார்.. இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 70. .ஜூனியர் பாலையாவின் உயிரிழப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X