ஜூனியர் என்டிஆர் கட்அவுட்டை தீயிட்டு கொளுத்தினார்களா ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன?
சென்னை: டோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படம் அவரது 30வது படமாக இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. ஜூனியர் என்டிஆருக்கு தெலுங்குப்படவுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஃபேன்பேஸ் காணப்படும் நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஜூனியர் என்டிஆருடன் முதல்முறையாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் ஜான்வி கபூர். சையத் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தை முன்னதாக ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா படத்தை போலவே மிகவும் மொக்கையாக்கியுள்ளார் கொரட்டாலா சிவா என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய ஃபேன்பேஸ் உள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அவரது 30வது படமாக இன்றைய தினம் வெளியாகியுள்ளது தேவரா படம். கொரட்டாலா சிவா இயக்கத்தில் வெளியான இந்தப்படத்திற்கு ஏராளமான ஹைப் காணப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடக்கவிருந்த இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் புகுந்ததால் ரகளை ஏற்பட்டு நிகழ்ச்சியையே ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்திருந்தனர். இந்நிலையில் இவை அனைத்தையும் சில மணிநேரங்களிலேயே கொரட்டாலா சிவா தவிடுபொடியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேவரா படம்: இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை மட்டுமே மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் ஜான்வி கபூர், அவரது எதிர்பார்ப்புடன அவரது நடிப்பு, அழகு உள்ளிட்ட எதிர்பார்ப்புகளுடன் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தகர்ந்துள்ளதாகவும் அவரையும் படத்தின் வில்லன் சையிஃப் அலிகான் உள்ளிட்டவர்களையும் இயக்குநர் வீணாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக திரையரங்கிற்கு அழுத காசு வேஸ்ட் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுததியுள்ளனர்.
கட்அவுட்டை கொளுத்தினார்களா ரசிகர்கள்?: இந்நிலையில் ஐதராபாத்தில் படத்தை பார்த்துவிட்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள், வெளியில் வந்து ஜூனியர் என்டிஆரின் கட்அவுட்டை கொளுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதன் வீடியோ வெளியான நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. படம் எதிர்பார்த்தபடி இல்லையென்றால் கட்அவுட்டை கொளுத்துவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கொரட்டாலா சிவாவின் முந்தைய படம் ஆச்சார்யா, ராம்சரண், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் வெளியானது. அந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை பெற்ற நிலையில், அவரை தேடிச்சென்று தானே வலையில் ஜூனியர் என்டிஆர் சிக்கிக் கொண்டதாக தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உண்மை என்ன?: இதனிடையே இது ரசிகர்களின் செயல் இல்லை, இது ஒரு விபத்து என்றும் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என திரையரங்க நிர்வாகம்தான் உறுதிப்படுத்த வேண்டும். முன்னதாக இந்தப் படத்தின் FDFSவை ரசிகர்கள் திரையரங்குகளில் பலவிதமான கொண்டாட்டங்களுடன் சென்று பார்த்தனர். படத்தின் முதல் பாகம் சுமாராகவும் இரண்டாவது பாகம் படுமோசமாகவும் இருப்பதாக ட்விட்டரில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, படத்தின் இரண்டாவது பாகமும் உருவாக உள்ளதாக படத்தின் இறுதியில் லீட் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











