தேவரா படம்: அம்மாவோட நீண்ட நாள் கனவு.. நிறைவேற்றிய ஜூனியர் என்டிஆர்.. சுற்றிவளைத்த ரசிகர்கள்!
உடுப்பி: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் உருவாகி வருகின்றன. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்ததாக தேவரா படம் பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்துள்ளார்.
இவர்களின் ஜோடி மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய மொழிகளில் என்ட்ரி கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். அடுத்ததாக ராம்சரணுடனும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்/ ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரணுடன் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படத்தில் அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. இந்த படம் ஆஸ்கார் விருதை நாட்டு நாட்டு பாடலுக்காக பெற்றிருந்தது. இந்த பாடலில் ராம்சரணுடன் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை போட்டிருந்தார் ஜூனியர் என்டிஆர். போட்டிப் பாடலாக நாட்டு நாட்டு பாடல் அமைந்திருந்தது.
நாட்டு நாட்டு பாடல்: இந்த பாடலில் ஜூனியர் என்டிஆரை வெற்றிபெற செய்வதற்காக ராம்சரண் விட்டுக் கொடுப்பதாக அமைந்திருக்கும். கீரவாணி இசையில் இந்த பாடல் அனைத்து மொழி ரசிகர்களையும் சிறப்பாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ளது தேவரா படம். இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக இணைந்துள்ளார் பிரபல நடிகை ஜான்வி கபூர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அம்மாவின் கனவு: தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய அம்மாவின் சொந்த ஊரான உடுப்பிக்கு தன்னுடைய மனைவி நடிகர் யஷ் மற்றும் இயக்குனர் பிரஷாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து சென்றுள்ளார் ஜூனியர் என்டிஆர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜூனியர் என்டிஆரின் அம்மா ஷாலினி. நந்தமுரி ஹரிகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தை அவர் தன்னுடைய சொந்த ஊராக ஏற்றுக் கொண்ட நிலையில் பல ஆண்டுகளை கடந்து தற்போது ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அம்மா ஷாலினியின் கனவை நிறைவேற்றியுள்ளார்.

உடுப்பி கோயிலில் சாமி தரிசனம்: தன்னுடைய அம்மா தன்னுடைய சொந்த ஊரான குந்தப்புராவில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது அவரின் ஆசையை தான் நிறைவேற்றியுள்ளதாக ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார். தன்னுடைய மனைவி, நடிகர் யாஷ், இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோருடன் தற்போது அவர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய அம்மா ஷாலினியின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 2ம் தேதி வரவுள்ள நிலையில், அவருக்கு மிகச்சிறப்பான பிறந்தநாள் கிஃப்டாக இந்த விசிட் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விசிட்டின் அடுத்தடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனிடையே, கோயில் வாசலில் அவரை ஏராளமான ரசிகர்கள் நேரில் சந்தித்து தங்களது உற்சாகத்தை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











