தேவரா படத்தின் வரவேற்பு..உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ஜூனியர் என்டிஆர்..என்ன இவர் இப்படி சொல்றாரு?

சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் தேவரா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

டோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ஜான்வி கபூர். இந்தப் படத்தின்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ சையிப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார்.

junior ntr devara movie janhvi kapoor

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது தேவரா படம். இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில், முன்னதாக வெளியான படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்கள் என அனைத்துமே மிரட்டலாக அமைந்திருந்தன. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து, ஹிட்டடித்தன. இந்தப் பாடல்களும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இநத்ப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

கலவையான விமர்சனங்கள்: முன்னதாக சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோரை லீட் கேரக்டர்களில் வைத்து ஆச்சார்யா என்ற படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர் கொரட்டாலா சிவா. இந்தப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்த நிலையில், தற்போது அவரது இயக்கத்திலேயே மீண்டும் இணைந்து மொக்கை வாங்கியுள்ளார் ஜூனியர் என்டிஆர். படத்தை ஜூனியர் என்டிஆரின் ஹீரோயிசம் மற்றும் அனிருத்தின் இசை மட்டுமே காப்பாற்றுகிறது. அனிருத்துக்கும் பிஜிஎம் உள்ளிட்டவற்றில் செயல்பட மேலும் அதிகமான ஸ்பேசை இயக்குநர் கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஜூனியர் என்டிஆர் நன்றி: இதேபோல ஜான்வி கபூர், சையிப் அலிகான் உள்ளிட்டவர்களுக்கும் இந்தப் படத்தில் அதிகமாக நடிக்க ஸ்கோப் இல்லாத நிலையே காணப்படுகிறது. ஆயினும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் FDFSவிலிருந்தே அவர்கள் தங்களின் உற்சாகத்தை பல்வேறு விதங்களில் காட்டியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ரசிகர்களின் இந்த வரவேற்பிற்கு ஜூனியர் என்டிஆர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தேவரா படம் மூலம் அனைவருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தை கொடுத்த கொரட்டாலா சிவாவிற்கு அவர் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

junior ntr devara movie janhvi kapoor

ரசிகர்களின் உற்சாகம்: இதனிடையே தன்னுடைய தம்பி அனிருத் இந்தப் படத்திற்கு சிறப்பான பாடல்களையும் பிஜிஎம்மையும் கொடுத்தது குறித்தும் உற்சாகம் தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னுடைய தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். தயாரிப்பாளர்கள் ஹரிக்கிருஷ்ணா கொசராஜூ மற்றும் சுதாகர் மிக்கிலினேனி ஆகியோர் இந்தப் படத்தின் தூண்களாக செயல்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சாபுசெரில், ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார். தன்னுடைய ரசிகர்கள் இநத்ப் படத்தை கொண்டாடுவது தன்னை மிகப்பெரிய உற்சாகக் கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன்: தான் படத்தில் நடித்ததை காட்டிலும் அதிகமாக ரசிகர்கள் என்ஜாய் செய்வது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜூனியர் என்டிஆர், தான் தொடர்ந்து இதேபோல ரசிகர்களை என்டர்டெயின் செய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார். தேவரா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் வெளியான நிலையில், படம் மிகப்பெரிய அளவில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆயினும் ஜூனியர் என்டிஆருக்கு இந்தப் படம் வசூல்ரீதியாக சிறப்பாக கைக்கொடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X