தேவரா படத்தோட ட்ரெயிலர் ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்.. அதிரடி அப்டேட்டை வெளியிட்ட ஹீரோ!

ஐதராபாத்: டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள தேவரான படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டின் பிரபல இயக்குநரான கொரட்டாலா சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

அனிருத் இசையில் தேவரா படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த 3 பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார். இந்த ஜோடியும் படத்தின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

junior ntr devara movie trailer

நடிகர் ஜூனியர் என்டிஆர்: டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றிப் பட நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜூனியர் என்டிஆர். ராம்சரணுடன் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து ஆட்டம் போட்டிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருந்தது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ளது தேவரா. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா வரும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

தேவரா ட்ரெயிலர் ரிலீஸ்: தேவரா படத்தில் பாலிவுட் நாயகி ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூரின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் வரும் 10ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் வெளியிட்ட அப்டேட்: இன்றைய தினம் விநாயக சதுர்த்தியைடுத்து தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்துள்ள ஜூனியர் என்டிஆர், தேவரா படத்தின் ட்ரெயிலர் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள நிலையில் இந்தப்படம் ஜூனியர் என்டிஆருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் மிகப்பெரிய வைபை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அடுத்ததாக வெளியாகவுள்ள டிரெயிலருக்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

ரசிகர்கள் உற்சாகம்: தேவரா படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நாயகன் சாயிப் அலிகான் இணைந்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், நந்தமுரி கல்யாண் உள்ளிட்ட பலரும் படத்தில் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங், தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரத்திற்கும் மேலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முறையான அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X