NTR31 movie: அடுத்த 1000 கோடி படம்.. NTR31 படத்தோட அப்டேட் என்ன தெரியுமா?

ஐதராபாத்: தேவரா படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இணைந்துள்ளார் நடிகர் ஜுனியர் என்டிஆர். கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளான இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

ஜுனியர் என்டிஆரின் 31வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கடந்த மாதத்தில் படத்தின் பூஜை போடப்பட்டது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஜுனியர் என்டிஆர் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

Junior NTR NTR31 movie Prashanth neel 31

நடிகர் ஜுனியர் என்டிஆர்: தெலுங்குப் படவுலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் ஜுனியர் என்டிஆர். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் கடந்த ஆண்டில் தேவரா படம் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் பிரபல பாலிவுட் நாயகி ஜான்வி கபூர், ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாகியிருந்தார். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இணைந்துள்ளார் ஜுனியர் என்டிஆர்.

இயக்குநர் பிரஷாந்த் நீல்: கேஜிஎப் படங்களின் வெற்றியை தொடர்ந்து சலார் படத்தை இயக்கியிருந்தார் பிரஷாந்த் நீல். இநத்ப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் அதிரடியான வசூலை குவித்திருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை பிரஷாந்த் நீல் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு மே மாதத்தில் ஜுனியர் என்டிஆர் பிறந்தநாளில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தை என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

Junior NTR NTR31 movie Prashanth neel 31

துவங்கியது சூட்டிங்: இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதத்தில் போடப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கில் கலவரக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படத்தை நடிகர் ஜுனியர் என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக காணப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிகப்பட்டுள்ள நிலையில், படம் எத்தகைய தாக்கத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற நடிகர், நடிகைகள்: படத்தில் ஜுனியர் என்டிஆருடன் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் படத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. மேலும் மலையாள நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X