மாறன் அண்ணா நம்பவே முடியல இதயம் ரொம்ப கனமா இருக்கு.. மாறன் மறைவுக்கு காளி வெங்கட் இரங்கல்!
சென்னை: கில்லி, கேஜிஎஃப், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
நடிகர் மாறன் உயிரிழப்புக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் காளி வெங்கட் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாறன் மறைவு
கொரோனாவுக்கு ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மரணித்து வரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து நடிகர்கள் தினந்தோறும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடிகர் மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

காளி வெங்கட் இரங்கல்
கில்லி, கே.ஜி.எஃப், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் மாறனின் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் தளபதி விஜய் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மாறன் அண்ணா
"மாறன் அண்ணா நம்பவே முடியல இதயம் ரொம்ப கனமா இருக்கு அன்புள்ளம் கொண்ட அண்ணாவுக்கு #ஆழ்ந்தஇரங்கல்" என நடிகர் மாறனின் புதிய படத்தின் போஸ்டரை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் காளி வெங்கட்.

மாஞ்சா கண்ணன்
நடிகர் காளி வெங்கட் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் மாஞ்சா கண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாறன் நடித்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளார். சார்பட்டா பரம்பரை படம் வெளியாகும் முன்னதாகவே அவரது உயிரை கொரோனா எனும் கொடிய நோய் பிரித்து விட்டது.

உஷாரா இருங்க
சாமானிய மக்களாக இருந்தாலும் சரி, சினிமா பிரபலங்களாக இருந்தாலும் சரி கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், வெளியே சுற்றாமல் வீட்டிலேயே மிகவும் பாதுகாப்புடன் இருங்க என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்ற உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications











