நடிகர் காளி வெங்கட் வீட்டில் நேர்ந்த சோகம்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

சென்னை: அகம் புறம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காளிவெங்கட் பல நல்ல கதாபாத்திரத்தில் துணை நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய தாயார் விஜயலட்சுமி நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 72 . இன்று இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் நடைற்று வருகிறது. மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த வெங்கட், சினிமா மீது இருந்த ஆசையால், 2008 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு அகம்புறம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த காளி வெங்கட், தெகிடி மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிகர் என பெயர் எடுத்ததார்.

kaali venkat vijayalakshmi death

காளி வெங்கட்: அந்த திரைப்படத்திற்கு பிறகு மௌனகுரு, தடையற தாக்க, கலகலப்பு, உதயம் என்எச்40, மத யானை கூட்டம், வாயை மூடி பேசவும், இறுதி சுற்று, மிருதன் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் ராட்சசன் திரைப்படத்தில் விஷ்ணுவிஷாலின் நண்பராக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கார்கி திரைப்படத்தில், வழக்கறிஞராக திக்குவாய் ரோலில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது எனலாம். தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர்,விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் கணேஷ் என்கிற ரோலில் போலீசாக நடித்திருந்தார். அந்த படம் இந்தியில் பேபி ஜான் என்கிற பெயலில் டிசம்பர் மாதம் வெளியானது. அந்த திரைப்படத்தில் காளி வெங்கட், கணேஷ் என்கிற ரோலில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்

தாயார் உயிரிழந்தார்: இந்நிலையில், காளி வெங்கட்டின் தாயார் விஜயலட்சுமி நேற்றி இரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் அவருக்கு வயது 72. விஜயலட்சுமி உடலுக்கு சென்னையில் உள்ள காளி வெங்கட்டின் வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி, காளி வெங்கட்டிற்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X